ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – முரஞ்சுதல்
வார்த்தை
: முரஞ்சுதல்
பொருள்
·
மூப்பு
·
முதிர்தல்
·
முற்றுதல்.
·
வலிபெறுதல்
·
நிரம்புதல்
குறிப்பு
உதவி / இலக்கிய பயன்பாடு
1.
சுரும்பொடு தேனும், வண்டும்,
அன்னமும், துவன்றி; புள்ளும்,
கரும்பொடு செந் நெல் காடும்,
கமல வாவிகளும், மல்கி;
பெரும் புனல் மருதம் சூழ்ந்த
கிடக்கை பின் கிடைக்கச் சென்றார்;
குரும்பை நீர் *முரஞ்சும்* சோலைக்
குலிந்தமும், புறத்துக் கொண்டார்.
கம்பராமாயணம்
பொன்வண்டு, தேன்வண்டு, கருவண்டு என்னும் பலவகையான வண்டுகளும் அன்னப் பறவைகளும் நெருங்கி நாரை முதலான ஏனைய பறவைகளும் கரும்புகளும் செந்நெற் பயிர்களும் தாமரைத் தடாகங்களும் நிறைந்து; மிக்க நீர்வளங் கொண்டமருதநிலம் சூழ்ந்துள்ள இடங்கள் தம் பின்னால் கிடக்கும்படி அப்பால் கடந்து சென்றனர் அந்த வானரவீரர்கள்; இளநீர்க் காய்கள்; நிரம்பிய தென்னஞ்சோலைகளையுடைய குலிந்த நாட்டையும்; (தமது) பின்புறத்ததாகும்படி
முன்னேறிச் சென்றார்கள்.
No comments:
Post a Comment