Sunday, October 28, 2012

இராவணண்


இராவணண் பற்றி சில செய்திகள். அவன் மிகப் பெரிய சிவ பக்தன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவனது கொடி முத்திரை என்ன தெரியுமா? வீணை. அரக்கனாக இருந்தும் மிகப் பெரிய/கடினமான இசைக் கருவியை தன் கொடியாக உடையவன். அவனுக்கு பத்து தலை என்பது உருவமாகப் படுகிறது. பத்து விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்களை தசாவதானி என்று அழைப்பார்கள். அப்படிதான் தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளில் சில சதாவதானிகள்(நூறு விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்கள்) இருக்கிறார்கள்.

மீண்டும் தியானிப்போம்.

Sunday, October 21, 2012

காளிங்க நர்த்தனம்


கண்ணன் பற்றி மற்றொரு சிந்தனை.

கண்ணன் மடுவில் சென்று காளிங்க நர்த்தனம் செய்தான் என்று செய்திகள்.
ஆறு,
காளிங்கன் பாம்பு - 5 தலை நாகம்.

இது யோக மார்க்க உருவமாக படுகிறது.
கண்ணன் மிகப் பெரிய யோகி.
இக லோக வாழ்க்கையில் பஞ்ச இந்திரியங்களை வெல்லுவதாகப் படுகிறது.

மீண்டும் சிந்திப்போம்.

Saturday, October 20, 2012

கண்ணன்


வினாயகரைப் பற்றி எழுத வேண்டும் என்ற தோன்றியது. பின் வினாயகரால் எழுத்தப்பட்ட மகாபாரத்தில் இருந்து தொடங்க எண்ணம்.

கண்ணனை கடவுளாக காண்பதை விட மிகப் பெரிய திட்ட வல்லுனராகவே நான் காண்கிறேன். இது கதை, இது நிஜம் என்பதல்ல நோக்கம். பஞ்ச இந்திரியங்கள். ஒரு மனம். ஒரு ஆத்மா இவற்றின் உருவகமாகத்தான் பஞ்ச பாண்டவர்கள். கிருஷ்ணை மற்றும் கண்ணன்.

96 வகைத் தத்துவத்திற்கும்(சைவ சித்தாந்தக் கருத்துப்படி), 4 வகை செயல்களான மனம், சித்தம்,புத்தி மற்றும் அகங்காரம் ஆக 100.  இவற்றின் உருவகமாக துரியோதனாதிகள்.

மீண்டும் தியானிப்போம்.

அந்தக்கரணம்

அந்தக்கரணம் என்பதற்கு மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் இவற்றின் கலவை என்பது ஒரு பொருள். உள் முகமாக நோக்குதல் என்பது மற்றொரு பொருள். எனக்கு புகட்டப்பட்ட அனுபவங்களை பகிர்தல் மட்டுமே நோக்கம். குற்றம் இருப்பின் குறை உடைய மனிதப்பிறப்பின் நிகழ்வுகள் காரணமாகும். நிறை இருப்பின் அனைத்தும் குருவருளையே சாரும்.