Friday, May 27, 2016

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 3


உமை :  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான  கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?

சிவன் :  உலகில் குளிர்ச்சி, வெம்மை போன்று இருமைகள் இருப்பதால், அதைச் சார்ந்த உயிர்கள் சந்திரன் போன்று குளிர்வும், சூரியன் போன்று வெம்மையும் உடையதாக இருக்கின்றன. விஷ்ணுவானவர் குளிர் பொருந்திய வடிவம் உடையவராக இருக்கிறார். நான் வெம்மை பொருந்திய வடிவில் நிலையாக இருக்கிறேன். உக்கிர வடிவமும், சிவந்த கண்களும், சூலமும் கொண்ட இந்த தேகத்தால் எப்பொழுதும் உலகினைக் காக்கிறேன். இந்த ரூபம் உலகின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது. வேறு வடிவம் கொண்டால் உலகின் இயக்கங்களில் தடுமாற்றம் உண்டாகும். அதன் பொருட்டே இவ்வடிவம்.

உமை :  நீங்கள் சந்திரனை பிறையாக அணியக் காரணம் என்ன?

சிவன் :தட்ச யாகத்தின் பொருட்டு கோபமுற்று இருந்தேன். அதனால் தேவர்கள் என்னால் துரத்தப்பட்டார்கள். என்னால் உதைக்கப்பட்டும் கூட சந்திரன் என்னிடத்தில் நல்வார்த்தை பேசி என்னிடம் வேண்டிக் கொண்டான். அன்று முதல் சந்திரனை என் தலையில் அணிந்து கொண்டேன்.

இதன் பிறகு பல விதமான துதிகளால் ரிஷிகளும், முனிவர்களும் ஈசனையும், உமா தேவியையும் துதித்தனர்.

உமை :  நான்கு வகையான வழிமுறைகளான பிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.


உமை :   இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர். அது குறித்து விளக்க வேண்டும்.




தொடரும்..


              *வாருணை  - மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்


               புகைப்படம் : இணையம்





Thursday, May 12, 2016

ஆட்சி சிதம்பரமா? மதுரையா?


பொதுவாக வீடுகளில் ஆண் ஆதிக்கமா, பெண் ஆதிக்கமா என்பதற்காக  விளையாட்டாக கேட்கப்படும் கேள்வி இது. இது சரியானது அல்ல.

வைத்திய சாஸ்திர நூல்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் எண்ணிக்கை 72,000 ல்  இருந்து 3,00,0000 வரை விரிவடைகின்றன.

அவற்றில் முதன்மை பெறும் நாடிகள் இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை,புருடன், காந்தாரி, அசனி, அலம்பருடன், சங்குனி, குரு ஆகும். அதிலும் குறிப்பாக  இடகலை, பிங்கலை ஆகிய நாடிகள் முக்கியம் பெறுகின்றன.

மூக்கின் இடது நாசியில் வழியே நடைபெறும் சுவாசம் இடகலையும்(சந்திரகலை)
வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலையும்(சூரிய கலை) பாம்பு குறீயீடாகவே குறிக்கப்படுகின்றன.

இந்த சுவாசஓட்டம் 4 நாழிக்கு (சுமார் 1 1/2 மணி நேரம்) ஒரு முறை மாறும். அதாவது ஒரு நாளில் 15 முறை (15*4 = 60 நாழிகை)

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்)

வலப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும், இடப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும் செய்ய வேண்டும். அப்போது அவைகள் முழுமை பெறும்.

சிதம்பரம் சூரிய நாடியை முதன்மையாய் உடையத் தலம். இதை உணர்த்தவே நடராஜரின் வலது பாதம் ஊன்றி இடது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.

மதுரை சந்திர நாடியை முதன்மையாய் உடையத் தலம்இதை உணர்த்தவே நடராஜரின் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.


அதிக விபரம் வேண்டுவோர் குரு முகமாக அறிக.
புகைப்படம் : இணையம்

Tuesday, May 10, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருவக்கரை


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவக்கரை

·   வராகநதியான சங்கராபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான கோயில்
·   சதுர அடிப்பாகத்தின் மீது அமைந்த வட்டமான ஆவுடையாரில் மூன்று திருமுகங்களுடன் கம்பீரமாக கிழக்கு நோக்கி திருக்காட்சி தரும் மூலவர்.
·   வக்கிரனை அழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்ற தலம்
·   ராஜகோபுரத்தின் இடப்பக்கம் வக்கிரகாளி அம்மன் சந்நிதி
·   காளியம்மன் சந்நிதி எதிரில் வக்ராசூரன் வழிபட்ட வக்கிரலிங்கம்(ஆத்மலிங்கம் , கண்டலிங்கம் )
·   நடராசர், வக்கிர தாண்வம் எனும் இடுப்புக்குமேல் வரை வளைத்து தூக்கிய திருவடியுடன் கால் மாறியாடும் திருக்கோல காட்சி அமைப்பு
·   உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் உடைய சந்நிதி.
·   குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன்  (வக்கிரன்) வழிபட்ட தலம்;  வல் + கரை - வலிய கரை, வற்கரை
·   வக்ராசூரனின் தங்கை துன்முகியை காளி சம்ஹாரம் செய்யும் போது வயிற்றில் குழந்தை இருந்த காரணத்தால் கருவில் உள்ள குழந்தையை குண்டலமாக ஆக்கிய் காதில் அணிந்திருக்கும் காட்சி.
·   சனிஸ்வரனின் காக வாகனம்  தென்திசை நோக்கி
·   கால மாற்றத்தால் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கல்லாக கல்மரங்களாக  மாறிக் காட்சியளிக்கின்றன
·   கருவறை , நந்தி , கொடிமரம் , ராஜகோபுரம் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் அமைந்துள்ளது



தலம்
திருவக்கரை
பிற பெயர்கள்
வக்ராபுரி, குண்டலிவனம் , துக்ரபுரி , வக்ரபுரிப்பட்டினம், பிறை சூடிய எம்பெருமான், ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்)
இறைவன்
சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
இறைவி
அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், பிரம்மா தீர்த்தம்,புண்ணிபுனல் தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 604304
தொலைபேசி : 9443251012, +91 - 413 - 2688949 , 2680870
வழிபட்டவர்கள்
வக்கிராசுரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திரு அருணகிரிநாதர்
நிர்வாகம்
இந்துசமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை - திண்டிவனம் - கூட்டேரிப்பட்டு - மயிலம் - பெரும்பாக்கம் – திருவக்கரை

சென்னை – பாண்டிச்சேரி – திருச்சிற்றம்பலம் கூட்ரோடு – பெரும்பாக்கம் – திருவக்கரை

விழுப்புரம் – முண்டியம்பாக்கம் – திருக்கனூர் – திருவக்கரை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில்  30    வது தலம்.

சந்திர மௌலீசுவரர்


அமிர்தேசுவரி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    8         

பாடல்

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.

பொருள்

அழகு பொருந்திய இலங்கை மன்னனான இராவணன் கலங்குமாறு, ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்திலும் தன் காற்பெருவிரலை ஊன்றி, அலறுமாறு செய்தவன். பின் அவனது ஆணவ செருக்கு நீங்கி, நல்ல சிந்தனையோடு ஈசனைப் போற்றி துதிக்க, ஈசன் அவனுக்கு வீரவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல்(சூலம்) ஏந்தி வீற்றிருந்து அருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.

கருத்து

·   மாயா மலங்களில் ஆணவ மலம் நீங்குமாறு செய்பவன் ஈசன். ஆணவத்தை விலக்கி உயிர்களுக்கு அருள் புரிபவன் என்பது துணிபு.
·   தன்னை அணுகியவர்களுக்கு வெற்றியும் அதனை அனுபவிக்கும் ஆயுளையும் தருபவன் ஈசன்


பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    9         

பாடல்

காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.

பொருள்

அழகிய வலிய தேகத்தை உடைய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி ரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்க சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்

கருத்து
·         ஈடு அழித்திட்டு - வலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து. (ஆணவம் முன்வைத்து)
·         உன்தனக்குச் சேமமே - உன் கண்ணுக்கு மட்டும் புலப்படுவான்



Reference
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே


(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)