Tuesday, December 30, 2014

மேன்மை கொள் சைவ நீதி - விளங்க வைத்த சந்தானக் குரவர்கள்



'சைவத்தின் மேற் சமயம் வேறில்லை' என்ற மொழித் தொடரை வைத்து சைவத்தின் பெருமையையும் அதற்கு காரணமாக இருக்கும் அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமான் ஈசனின் பெருமைகளையும் அறியலாம்.

அறியவொண்ணா பெருமைகள் உடையது சிவனின் பெயர்கள். அப்படிப்பட்ட சிவனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் சந்தானக் குரவர்கள். சிவனின் பெருமைகளை பாடல்களாக அருளியவர்கள்.சைவ சித்தாந்த சாத்திரங்கள் இவர்களால் அருளப் பெற்றதே.

குருவைக் குறிக்கும் சொல்லே குரவர். இவர்கள் நால்வர் ஆவார்.

மெய்கண்டார்,
மறைஞான சம்பந்தர்,
அருணந்தி சிவாசாரியார்,
உமாபதி சிவம்

இவர்கள் குரு சீடர் மரபு கொண்டவர்கள். திரு மடங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மூலம் சைவ நெறி தழைக்க பங்களித்தவர்கள்.

இவர்களது காலம் 12, 13ம் நூற்றாண்டு.

இவர்களது பெயர்களும் இவர் இயற்றிய நூல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

·   மெய்கண்டார் - சிவஞான போதம்

·   அருள்நந்தி சிவாசாரியார் - சிவஞான சித்தியார், இருபா இருபது

·   கடந்தை மறைஞான சம்பந்தர் - சதமணிக் கோவைசதமணிக்கோவை

·   உமாபதி சிவாச்சாரியார் - சிவப்பிரகாசம், திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம்

இவர்களைப்பற்றி விரிவாக எழுத உள்ளேன். திருவருள் துணை புரியட்டும்.


Friday, December 19, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சிமேற்றளி - காஞ்சிபுரம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருக்கச்சிமேற்றளி

அமைவிடம் - பிள்ளையார் பாளையம்
ஈசன் சுயம்பு மூர்த்தி
இரு மூலவர் சன்னதிகள்
சிவ சாரூப நிலை வேண்டி திருமால் இறைவனை நோக்கி தவமிருந்த தலம்
ஞான சம்மந்தரில் பதிகம் கேட்டு சிவபெருமான் உருகியதால் ஓத உருகீசர்
கற்றளிகற்களால் கட்டப்பட்ட கோயில். மேற்றளி - மேற்கு திசையில் அமையப்பெற்ற கோயில்
ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு திருமால் உருகியதால் ஓத உருகீசர் - கர்ப்பக்கிருகத்துள் தனி சந்நிதி









தலம்
திருமேற்றளீஸ்வரர்
பிற பெயர்கள்
திருக்கச்சிமேற்றளி, கற்றளி
இறைவன்
திருமேற்றளிநாதர்
இறைவி
திருமேற்றளிநாயகி
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
விஷ்ணு தீர்த்தம்
விழாக்கள்
சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்,
பிள்ளையார்பாளையம்-631 501
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் மாவட்டம். 09865355572, 09994585006
வழிபட்டவர்கள்
நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேர் மற்றும்  புதன்
பாடியவர்கள்
திருநாவுக்கரசர் -  பதிகங்கள்,  ,  சுந்தரர் -  பதிகங்கள், திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 234 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   2 வது தலம்.

* ஞானசம்பந்தரின்  தேவாரப் பாடல்கள் கிடைக்கவில்லை

திருமேற்றளீஸ்வரர்



பாடியவர்                     திருநாவுக்கரசு சுவாமிகள்
திருமுறை                    4ம் திருமுறை 
பதிக எண்                    43
திருமுறை எண்               10

பாடல்


தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.

பொருள்

தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், (தனது கர்வத்தால்) கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க, அதனால் பார்வதி நடுக்கமுற, பார்வதியின் நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால அவன் தலைகள் நெரிய, தன் தவறை உணர்ந்து கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாட அதனால் அவனுக்கு அருள் செய்தவர். அவர் இந்த காஞ்சித் திருத் தலத்தில் உறையும் மேற்றளியார் ஆவார்.

கருத்து

தென்னவன் -  இராவணன் ,
சேயிழை - செய்ய ( கல் ) இழை ( த்துச் செய்யப்பட்ட அணிகளைப் ) பூண்டவள் . இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
மன்னவன் - என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன் என்றும் கொள்ளலாம்) 
நெரிய - நொறுங்க
கன்னலின் - கரும்பினைப் போலும் இனிமை பயக்கும் , 



பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    021
திருமுறை எண்               9

பாடல்

நிலையா நின்னடியே நினைந் தேன்நி னைதலுமே
தலைவா நின்னினையப் பணித் தாய்ச லமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற்ற ளிஉறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.

பொருள்

பெரிய மதில்கள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் உறையும் மலை போன்றவனே,  அடியேன் உனது திருவடிகளையே நிலையான பொருளாக உணர்ந்தேன். அவ்வாறு உணர்ந்த பிறகு அதில் இருந்து என்றும் மாறாமல் தொடந்து இருக்க திருவருள் செய்தாய். அதனால் எனது துன்பங்கள் ஒழிந்தவன் ஆனேன். ஆகவே அடியேன், உன்னை விடுத்து பிற தெய்வங்களை மனம் மகிழ்ந்து புகழ மாட்டேன்.

கருத்து
நிலையா நின்னடியே - (திருமாலாலும்) அடைய முடியா திருவடி (இது என் கருத்து)
சலமொழிந்தேன் - கடலைப் போன்ற பல பிறவி நீங்கினேன். (சலதி கிழிந்து - கந்தர் அலங்காரம்)

புகைப்படம் : கோலாலகிருஷ்ணன் விஜயகுமார்

Tuesday, December 9, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்


வடிவம்

·         ஞானம் செல்வம் இரண்டையும் தரும் வடிவம்
·         சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்று கொண்டு யார் பெரியவர் என்ற வாதத்தினால் அம்மையிடம் முறையிட அவர்களுக்கு இருவரும் ஒருவரே என குறிக்க எடுத்த வடிவம்.
·         சுவாத்தை மாற்றுவதால் ப்ரமத்தை அறியலாம். மேல் விவரங்களை குரு மூலமாக அறியவும்.
வலது - பிங்களை(சூரிய கலை நாடி)
இடது - இடகலை(சந்திர கலை நாடி)
சுழுமுனை - இரு பக்கங்களிலும் காற்றை செலுத்துதல்

எண்

வலது பாதி(சிவன்)
இடது பாதி(திருமால்)
1
தலை
கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி. பின்புறம் சிரசக்கரம் அல்லது ஒளிவட்டம்,சடாமுடி
கிரீடம்
2
திருமுகம்
நெற்றிக் கண்(அர்த்தநேத்திரன்), திருநீறு
திருநாமம்
3
காது
தாடங்கம், மகர குண்டலம், சர்ப்ப குண்டலம்
மகர குண்டலம்
4
கைகள்
·  மழு, அபய ஹஸ்தம்
·  பரசு மற்றும் நாகம்
சக்கரம், சங்கு அல்லது கதை மற்றும் ஊரு ஹஸ்தம்/(கடக முத்திரை) சங்க ஹஸ்தம். கேயூரம், கங்கணம்
5
மார்பு
ருத்ராட்சம்
திருவாபரணங்கள்
6
இடுப்பு
புலித்தோல் ஆடை
பஞ்சகச்சம்
7
திருவாட்சி
நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி

8
வண்ணம்
வெண்மை
நீலநிற மேனி
9
தோற்றம்
கோரம்
சாந்தம்
10
வாகனம்
வலது புறம் நந்தி
இடது புறம் கருடன்

கேசாதி பாதமாக விவரிக்கப்பட்டுள்ளன.  சோழர் கால வடிவமும், பல்லவர் கால/இதர வடிவமும் சில இடங்களில் வேறு வேறாக இருக்கின்றன.  

வேறு பெயர்கள்

சங்கர நாராயணர்
ஹரியர்த்தமூர்த்தி

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·  சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்
·  தஞ்சைப் பெரிய கோயில்
·  சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தஞ்சை மேலராஜவீதி
·  கங்கை கொண்ட சோழபுரம்
·  சிதம்பரம்
·  திருஅறையணிநல்லூர் (தற்போது அரகண்டநல்லூர் )- திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோவில்
·  திருச்செந்தூர்
·  திருப்பெருந்துறை
·  மீனாட்சி அம்மன் வசந்த மண்டபம், மதுரை
·  நாகேஸ்வரர் கோவில், கும்பகோணம்
·  குடுமியான் மலை குடவறைச் சிற்பங்கள்
·  ஹரிஹர், ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரை, தாவன்கெரே மாவட்டம், கர்நாடகா
·  கூடலி, சிவமோகா எனப்படும்ஷிமோகா- துங்காவும்(திருமால்) பத்ராவும்(சிவன்) சங்கமம்

இதரக் குறிப்புகள்
·  
சங்கர நாராயணர் கோயிற் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் என்றொரு நூலை முத்துவீரக் கவிராயரவர் என்பவர் இயற்றி இருக்கிறார்.
·  வாமன புராணம்
·  பேயாழ்வார் பாசுரம்
தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

புகைப்படம் : வலைத்தளம்