Tuesday, December 9, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்


வடிவம்

·         ஞானம் செல்வம் இரண்டையும் தரும் வடிவம்
·         சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்று கொண்டு யார் பெரியவர் என்ற வாதத்தினால் அம்மையிடம் முறையிட அவர்களுக்கு இருவரும் ஒருவரே என குறிக்க எடுத்த வடிவம்.
·         சுவாத்தை மாற்றுவதால் ப்ரமத்தை அறியலாம். மேல் விவரங்களை குரு மூலமாக அறியவும்.
வலது - பிங்களை(சூரிய கலை நாடி)
இடது - இடகலை(சந்திர கலை நாடி)
சுழுமுனை - இரு பக்கங்களிலும் காற்றை செலுத்துதல்

எண்

வலது பாதி(சிவன்)
இடது பாதி(திருமால்)
1
தலை
கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி. பின்புறம் சிரசக்கரம் அல்லது ஒளிவட்டம்,சடாமுடி
கிரீடம்
2
திருமுகம்
நெற்றிக் கண்(அர்த்தநேத்திரன்), திருநீறு
திருநாமம்
3
காது
தாடங்கம், மகர குண்டலம், சர்ப்ப குண்டலம்
மகர குண்டலம்
4
கைகள்
·  மழு, அபய ஹஸ்தம்
·  பரசு மற்றும் நாகம்
சக்கரம், சங்கு அல்லது கதை மற்றும் ஊரு ஹஸ்தம்/(கடக முத்திரை) சங்க ஹஸ்தம். கேயூரம், கங்கணம்
5
மார்பு
ருத்ராட்சம்
திருவாபரணங்கள்
6
இடுப்பு
புலித்தோல் ஆடை
பஞ்சகச்சம்
7
திருவாட்சி
நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி

8
வண்ணம்
வெண்மை
நீலநிற மேனி
9
தோற்றம்
கோரம்
சாந்தம்
10
வாகனம்
வலது புறம் நந்தி
இடது புறம் கருடன்

கேசாதி பாதமாக விவரிக்கப்பட்டுள்ளன.  சோழர் கால வடிவமும், பல்லவர் கால/இதர வடிவமும் சில இடங்களில் வேறு வேறாக இருக்கின்றன.  

வேறு பெயர்கள்

சங்கர நாராயணர்
ஹரியர்த்தமூர்த்தி

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·  சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்
·  தஞ்சைப் பெரிய கோயில்
·  சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தஞ்சை மேலராஜவீதி
·  கங்கை கொண்ட சோழபுரம்
·  சிதம்பரம்
·  திருஅறையணிநல்லூர் (தற்போது அரகண்டநல்லூர் )- திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோவில்
·  திருச்செந்தூர்
·  திருப்பெருந்துறை
·  மீனாட்சி அம்மன் வசந்த மண்டபம், மதுரை
·  நாகேஸ்வரர் கோவில், கும்பகோணம்
·  குடுமியான் மலை குடவறைச் சிற்பங்கள்
·  ஹரிஹர், ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரை, தாவன்கெரே மாவட்டம், கர்நாடகா
·  கூடலி, சிவமோகா எனப்படும்ஷிமோகா- துங்காவும்(திருமால்) பத்ராவும்(சிவன்) சங்கமம்

இதரக் குறிப்புகள்
·  
சங்கர நாராயணர் கோயிற் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் என்றொரு நூலை முத்துவீரக் கவிராயரவர் என்பவர் இயற்றி இருக்கிறார்.
·  வாமன புராணம்
·  பேயாழ்வார் பாசுரம்
தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

புகைப்படம் : வலைத்தளம்

No comments:

Post a Comment