Saturday, September 27, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 9/25 சக்திதரமூர்த்தி




ஜனனம், மரணம் ஆகியவற்றில் உழலக்கூடிய மனிதர்கள் மட்டும் தேவர்கள் ஆகியவர்களுக்கு முக்தியை அளிக்கும் பொருட்டு, தனது வாம பாகத்தில் இருந்து உமா தேவியாரை தோற்றுவித்த மூர்த்தி  என்ற குறிப்பு மட்டுமே காணப்படுகிறது.

இது போக மூர்த்தி 

(இம் மூர்த்தி பற்றிய குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தெரிந்து தெளிவடைகிறேன்.)




Friday, September 26, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

வைசேஷிகம் - சிறு விளக்கம்

·   ஆன்மா வின் தன்மைகளை கூறல்
·   ஆன்மா அழிவற்றதாக என்றும் உள்ளது.
·   அது அருவமாக இருக்கும்
·   அது ஜீவான்மா, பரமான்மா என்று இருவகையாகப் பிரியும்.
·   பரமான்மா  - பிறப்பிலி
·   ஜீவான்மா - பல் வேறு பிறப்புக்கள் எடுக்கும்.
·   புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப  மனத்தில் தன்மையால் ஞானம் கிடைக்கும்.
·   இயல்புகளை அறியும் ஞானத்தால் கர்மம் நசிக்கும்.
·   அவ்வாறு நசிக்க ஞானமின்றி செயல் அற்று இருப்பதே முக்தி.
·   வேதம் ஈஸ்வரனால் செய்யப்பட்டது. 


மீமாம்சை  - சிறு விளக்கம்

·   வேதங்களில் சொல்லப்பட்டவைகளே அனுட்டிபவர்கள் சொர்கத்தை சேருவார்கள்
·   வேதம் சுயம்பு
·   பிரபஞ்சம்  நித்யம் அஃதாவது என்றும் உள்ளது.
·   ஆன்மாக்கள் பல உண்டு.
·   ஆன்மாக்களுக்கு செய்த கர்மத்திற்கு ஏற்ப அதற்கான பலன்களை அனுபவிப்பதால் அதைத் தர ஈஸ்வரன் என்ற ஒருவன் தேவையில்லை

வேதாந்தம் - சிறு விளக்கம்

·   உபநிஷத்துக்களில் சொல்லப்படும் (பரம) ஆன்மா இந்த உலகப்படைப்பிற்கான காரணம்
·   இதுவே உலகத்தை வழி நடத்துகிறது
·   (ஜீவ) ஆன்மா தனது பந்தத்தை அறுக்க இதுவே உபாயம்.
·   அந்த பந்தம் நீங்காததற்கு காரணத்தை விளக்கும்
·   பந்தம் நீங்கியப்பின் அடையும் புருடன் இது என்று கூறும்

ஆறு தத்துவ சாத்திரங்களையும் படைத்தவர்கள் யார் யார்?

சாங்கியம் - கபிலர்
பாதஞ்சலம் - பதஞ்சலி
நியாயம் - அக்ஷபாதர்
வைசேஷிகம் - கணாதர்
மீமாம்சை - ஜைமினி
வேதாந்தம் - வியாசர்



Saturday, September 20, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்


சாங்கியம் - சிறு விளக்கம்

·   தேகாதி பிரபஞ்சத்திற்கு காரணமானதும், அருவமாகவும், என்றும் உள்ளதாகவும், எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்தும் ஜடமாகவும் உடைய மாயை உண்டு என உணர்தல்.
·   அதனோடு தொடர்புடைய ஆன்மா உண்டு என்றும் அறிதல்.
·   ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தால் சுக துக்ககங்கள் உண்டு என்றும், அதை பிரித்து உணரும் பகுத்தறிவதாலே அஞ்ஞானம் நீங்கி ஆன்மா முக்தி அடையும் என்றும் உணர்தல்.
·   பல பிறவிகளுக்குப் பின் முக்தி உண்டு என உணர்தல்,
·   ஈஸ்வரனை தத்துவ விசாரணை மூலமாக அறிய இயலா நிலையில் ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை என்று கூறுவது.

பாதஞ்சலம் -  சிறு விளக்கம்

சாங்கிய கருத்துக்களை ஏற்பது. அதோடு மட்டுமல்லாமல் அதற்கு மேல் படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்யவும், உண்மை ஞானத்தை உபதேசிப்பவனாகவும் உடைய ஈஸ்வரன் ஒருவன் உண்டு எனவும், அவனை யோக முறையினால் காண இயலும் என்றும் விளக்குவது.

நியாயம் -  சிறு விளக்கம்

தர்கத்தின் வாயிலாக ஜடப் பொருள்களையும் சித்துப்  பொருள்களையும் தனித்தனியே நித்தியப் பொருள்களாக அறிதல். ஜடத்தில் இருந்து சித்தினை பிரித்து அறிந்து முக்தி என்றும் கூறுதல் . சித்து மனம் என்றும் அது அணுவினை விட சிறியது என்றும் கூறும்.

Thursday, September 18, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 8/25 சுகாசனர்



மகேசுவரமூர்த்தங்கள் 8/25 சுகாசனர்

வடிவம்
·   உருவ திருமேனி - யோக வடிவம்
·   உமா தேவிக்கு சிவாகமப் பொருளை விளக்கிய திருவடிவம்
·   சுகாசனம் - சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்று.
·   சத்யோஜாத முகத்திலில் இருந்து தோன்றிய வடிவம்.
·   இடது கால் - மடக்கி
·   வலது கால் - தொங்க விட்டபடி
·   இடது மேல் திருக்கரத்தில் - மான்
·   வலது மேல் திருக்கரத்தில் - மழு
·   வலது கீழ் திருக்கரத்தில் - அபயம்
·   இடது கீழ் திருக்கரத்தில் - வரத கரம்

வேறு பெயர்கள்

சுகாசன மூர்த்தி
நலவிருக்கையன்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

சுவேதாரண்யேசுவர் கோயில், திருவெண்காடு
மீனாட்சி அம்மன் ஆலயம் - இரண்டாம் பிரகாரம் ,மதுரை
கயிலாய நாதர், காஞ்சிபுரம்
சட்டைநாதர் திருக்கோயில் - சீர்காழி
சிதம்பரம்
இராமேஸ்வரம்
கங்கை கொண்ட சோழபுரம்

இதரக் குறிப்புகள்
வகைகள்
உமாசகித சுகாசனர்
உமா மகேசுவர சுகாசனர்
சோமாஸ்கந்த சுகாசனர்

விளக்க நூல்கள்
சில்ப ரத்தினம்
ஸ்ரீதத்துவநிதி


Image : Dinamalar

உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Monday, September 15, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

புராணம் என்பது என்ன?

வேத ஆகமப் பொருளை சரித்திர வடிவில் விவரிப்பது.

புராணத்தில் விவரிக்கப்படுபவை எவை? விளக்கங்கள்

உலக் தோற்றம், உயிர் இறைவனை அடைதல், பாரம்பரியங்கள், அவற்றோடு தொர்டபுடைய கதைகள், மனுவந்தரங்கள் ஆகியவற்றை கூறும். இது சைவம் முதல் ஆக்கினேயம் வரை உள்ள பதினெட்டு ஆகும்.


சிவபுராணம்
சைவம் ,காந்தம், லிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம்
மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் – 10
விஷ்ணுபுராணம்
நாரதீயம்,பாகவதம்,காரூடம்,வைணவம் – 4
பிரமபுராணம்
பிரமம், பதுமம் – 2
சூரியபுராணம்
பிரமகைவர்த்தம் – 1
அக்னிபுராணம்
ஆக்கிநேயம் - 1
உபபுராணங்கள்
உசனம்,கபிலம்,காளி,சனற்குமாரம்,சாம்பவம்,சிவதன்மம்,சௌரம்,
தூருவாசம்,நந்தி,நாரசிங்கம்,நாரதீயம்,பராசரம்,பார்க்கவம்,
ஆங்கிரம்,மாரீசம்,மானவம்,வாசிட்டலைங்கம், வாருணம் - 18



சாத்திரங்கள் எதனை உணர்த்தும்?

சிஷை - வேதங்களை ஓதும் முறை
கற்பம் - வேதங்களில் விதித்த கர்மங்களை அனுட்டிக்கும் முறை
சோதிடம் - வேதங்களை ஒதுவதற்கான காலம்
வியாகரணம் - வேதங்களின் எழுத்து, சொல், பொருள் இலக்கணம்
நிருத்தம் - சொற்களின் வியாக்யாணம்
சந்தம் - வேத மந்திரங்களின் சந்தங்களின் இலக்கணம்

இவை தவிர வேறு சாத்திரங்கள் இருக்கின்றனவா?


சாங்கியம், பாதஞ்சலம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை மற்றும் வேதாந்தம் என ஆறு தத்துவ சாத்திரங்கள் உள்ளன.



Friday, September 12, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருவேற்காடு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருவேற்காடு

இறைவன் சுயம்பு -  லிங்கத்தின் பின் சிவனும் பார்வதியும் திருமணக் கோலம்
அம்பாள் – சுயம்பு - கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம்
அகத்தியருக்கு திருமண காட்சி அளித்த இடங்களில் இதுவும் ஒன்று.
நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை வழிபட்டதலம் – வேற்காடு
முருகன் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்த, ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்ட வடிவம்
ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவரான பராசர வழிபட்ட தலம்
நாயன்மார்கள் சிறப்பு -  மூர்க்க நாயனார் பிறந்து வாழ்ந்த தலம்
கஜபிருஷ்ட விமான அமைப்பு

வழிபட்டவர்கள்


  • விநாயகர்
  • திருமால்
  • ஆதிசேஷனும்
  • முருகன்
  • ஒன்பது கோள்கள்
  • அஷ்டதிக்பாலகர்கள்
  • பராசரர்
  • அத்திரி
  • பிருகு
  • குச்சரர்
  • ஆங்கீரசர்
  • வசிட்டர்
  • கவுதமர்
  • காசிபர்
  • திண்டி
  • முண்டி
  • வாலகில்லியர்
  • விரதாக்னி
  • பஞ்சபாண்டவர்கள்
  • சிபி சோழன்
  • வாணன்

தலம்
திருவேற்காடு
பிற பெயர்கள்
விடந்தீண்டாப்பதி
இறைவன்
வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
இறைவி
பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
தல விருட்சம்
வெள் வேல மரம்
தீர்த்தம்
வேலாயுத தீர்த்தம், பாலிநதி
விழாக்கள்
மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவேற்காடு அஞ்சல்
திருவள்ளூர் மாவட்டம் – 600077
+91- 44-2627 2430, 2627 2487.
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்-11 பாடல்கள், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன் சாவடி ->  கிளை சாலையில்  இருந்து 2 கிலோ மீட்டர்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 255 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   23 வது தலம்.

வேதபுரீஸ்வரர்


பாலாம்பிகை


பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    57
திருமுறை எண்               8

பாடல்

மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.

பொருள்

வளமை பொருந்திய முப்புரங்களும் மாயுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவை வில்லாக உடைய ஈசன் உறையும் இடம் திருவேற்காடு ஆகும். அதன் புகழினை சொல்ல வல்லவர்கள் குறுகிய மனம் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். அங்கு சென்று தரிசிப்பவர்கள் நீண்ட ஆயுளை உடையவர்கள் ஆவார்.

கருத்து
தீர்க்கம் - நெடுங்காலம்
சுருங்கா மனத்தவர் – நீண்ட மனம் உடையவர்கள். இவர்கள் மட்டுமே ஈசனை நினைக்க வல்லவர்கள். குறுகிய மனம் உடையவர்கள் ஈசன் நினைவு அற்றவர்களாக இருப்பார்கள் என்பது துணியு.



பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    57
திருமுறை எண்               9

பாடல்

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னானை நினைமினே

பொருள்

சிரைச்சேதம்  செய்யப்பட்ட ப்ரம்மனின் தலை ஓட்டினை உணவு ஏற்கும் பாத்திரமாக கொண்ட ஈசன் உறையும் இடம் திருவேற்காடு. ஆணமையை குணமாக கொண்ட அரக்கன் ஆகிய இராவணனின் தனது கால் விரலால் சிறிது ஊன்றி அக் குணத்தை அழித்தவன் திருவேற்காடு உறையும் ஈசன். அவனை நினையுங்கள்.

கருத்து
பரக்கினார் – பிரமன்
விரக்கினான் - சாமர்த்தியமுடையன்

புகைப்படம்/உதவி : தினமலர் மற்றும் வலைத்தலங்கள்