தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருவேற்காடு
•
இறைவன்
சுயம்பு - லிங்கத்தின் பின் சிவனும் பார்வதியும்
திருமணக் கோலம்
•
அம்பாள்
– சுயம்பு - கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம்
•
அகத்தியருக்கு
திருமண காட்சி அளித்த இடங்களில் இதுவும் ஒன்று.
•
நான்கு
வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை வழிபட்டதலம் – வேற்காடு
•
முருகன்
வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்த, ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்ட வடிவம்
•
ஜோதிட
சாஸ்திரத்தில் வல்லவரான பராசர வழிபட்ட தலம்
•
நாயன்மார்கள்
சிறப்பு - மூர்க்க நாயனார் பிறந்து வாழ்ந்த
தலம்
• கஜபிருஷ்ட விமான அமைப்பு
• கஜபிருஷ்ட விமான அமைப்பு
வழிபட்டவர்கள்
- விநாயகர்
- திருமால்
- ஆதிசேஷனும்
- முருகன்
- ஒன்பது கோள்கள்
- அஷ்டதிக்பாலகர்கள்
- பராசரர்
- அத்திரி
- பிருகு
- குச்சரர்
- ஆங்கீரசர்
- வசிட்டர்
- கவுதமர்
- காசிபர்
- திண்டி
- முண்டி
- வாலகில்லியர்
- விரதாக்னி
- பஞ்சபாண்டவர்கள்
- சிபி சோழன்
- வாணன்
தலம்
|
திருவேற்காடு
|
பிற பெயர்கள்
|
விடந்தீண்டாப்பதி
|
இறைவன்
|
வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
|
இறைவி
|
பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
|
தல விருட்சம்
|
வெள் வேல மரம்
|
தீர்த்தம்
|
வேலாயுத தீர்த்தம், பாலிநதி
|
விழாக்கள்
|
மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6.30 மணி முதல் இரவு
8.30 மணி வரை
அருள்மிகு வேதபுரீஸ்வரர்
திருக்கோவில்
திருவேற்காடு அஞ்சல்
திருவள்ளூர் மாவட்டம் –
600077
+91- 44-2627 2430, 2627 2487.
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர்-11 பாடல்கள்,
அருணகிரிநாதர்
|
நிர்வாகம்
|
|
இருப்பிடம்
|
சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
வேலப்பன் சாவடி -> கிளை சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர்
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 255 வது
தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 23 வது தலம்.
|
வேதபுரீஸ்வரர்
பாலாம்பிகை
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1ம் திருமுறை
பதிக எண் 57
திருமுறை
எண் 8
பாடல்
மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி
னானுறை வேற்காடு
சொல்ல வல்ல
சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர்
தீர்க்கமே.
பொருள்
வளமை
பொருந்திய முப்புரங்களும் மாயுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவை வில்லாக உடைய ஈசன் உறையும்
இடம் திருவேற்காடு ஆகும். அதன் புகழினை சொல்ல வல்லவர்கள் குறுகிய மனம் உடையவர்களாக
இருக்க மாட்டார்கள். அங்கு சென்று தரிசிப்பவர்கள் நீண்ட ஆயுளை உடையவர்கள் ஆவார்.
கருத்து
தீர்க்கம்
- நெடுங்காலம்
சுருங்கா
மனத்தவர் – நீண்ட மனம் உடையவர்கள். இவர்கள் மட்டுமே ஈசனை நினைக்க வல்லவர்கள். குறுகிய
மனம் உடையவர்கள் ஈசன் நினைவு அற்றவர்களாக இருப்பார்கள் என்பது துணியு.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1ம் திருமுறை
பதிக எண் 57
திருமுறை
எண் 9
பாடல்
பரக்கி னார்படு
வெண்டலை யிற்பலி
விரக்கி
னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை
யடரப்பட் டானிறை
நெருக்கி
னானை நினைமினே
பொருள்
சிரைச்சேதம் செய்யப்பட்ட ப்ரம்மனின் தலை ஓட்டினை உணவு ஏற்கும்
பாத்திரமாக கொண்ட ஈசன் உறையும் இடம் திருவேற்காடு. ஆணமையை குணமாக கொண்ட அரக்கன் ஆகிய
இராவணனின் தனது கால் விரலால் சிறிது ஊன்றி அக் குணத்தை அழித்தவன் திருவேற்காடு உறையும்
ஈசன். அவனை நினையுங்கள்.
கருத்து
பரக்கினார்
– பிரமன்
விரக்கினான்
- சாமர்த்தியமுடையன்
புகைப்படம்/உதவி : தினமலர் மற்றும் வலைத்தலங்கள்
No comments:
Post a Comment