Saturday, August 29, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 18/25 சலந்தாரி



வடிவம்(பொது)

·         சலந்தரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட வடிவம்
·         உருவத்திருமேனி
·         வாகனம் – காளை

வேறு பெயர்கள்

சலந்தராகரர்
சலந்தர சம்மார மூர்த்தி
கடல் வளர்ந்தானைக் கொன்றான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருவிற்குடி, திருவாருர்
·         மீனாட்சி அம்மன் கோயில், மதுரை

இதரக் குறிப்புகள்

நூல்கள்
1.
·         இலிங்க புராணம்
·         சக்ராயுதம்

2.
திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ்
சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன்
சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச்
சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே. 

3.
சிவஞானசித்தியார் பரபக்கம்
அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே 
துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து) 
அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத 
நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான்.           292

4.
சலந்தர முத்திரை என்பது வாசி யோகத்தில் உள்ளது. இந்த உபதேசங்கள் சுப்ரமணியரால் அகத்தியருக்கு அருளப்பட்டது.
5
11ம் திருமுறையில்  பொன் வண்ணத் தந்தாதி பகுதிகளிலும் இவ்வடிவம் குறித்து பேசப்படுகிறது.
6
சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே 1.132.8

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் 2.48.7

சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே 3.113.2

தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்த சக்கரம்  எனக்கு அருள் என்று
ன்று அரி வழிபட்ட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் 3.119.7

சம்பரற் கருளிச் சலந்தரன்வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த 3.122.2

சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ 6.34.7

கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி 6.52.7

சமரம் மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் 6.53.2

சலந்தரனைப் பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி  6.71.1

சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் 6.73.5

உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட
ஓராழி படைத்தவன் காண்              6.76.10

அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறாய் 6.86.6

சலந்தரனைத் தடிந்தோனை 6.90.9

விளிந்தெழுந்த சலந்தனை வீட்டி னானை 6.91.2

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி 7.16.2

சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன் நெடு மாற்கருள் செய்தபிரான் 7.98.5

சலமுடையசலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி 8.272

கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை 8/2. 209

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்க நெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன் மறலி வேள் இவர்மிகை செகுத்தோன் 59.5

பொங்கும் சலந்தரன்   போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற் குறித் தாழிசெய் தானே 10.642

சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் 11.81

சலந்தரனார் பட்டதுவும்  தாம் 11.385

சலந்தரன் உடலம் தான் மிகத் தடிந்தும் 11.491

சலந்தரனைச் சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃ தீந்த விறல்போற்றி-27  11.500

சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம் 11.704

சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி 11.865

சலந்தரனைப் போக்க 11.913

சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் 11.920

கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய் 11.933

புகைப்படம் : இணையம்






Thursday, August 13, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருஇலம்பையங்கோட்டூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருஇலம்பையங்கோட்டூர்

மூலவர் தீண்டாத் திருமேனி; சுயம்பு மூர்த்தி; கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி
சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறம். பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பு
கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி - யோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு
தலவிநாயகர் -  குறுந்த விநாயகர், சுத்தான்னம் நைவேத்தியம்
வருடத்தில் ஏப்ரல் 2 - 7 , செப்டம்பர் 5 - 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி ஈசனை பூஜிக்கிறார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அருகில் வரும் போது , இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்துதல், உடன் வந்த அடியார்களளின் அறியாமை, பின் இறைவனே  வெள்ளைப் பசு வடிவில் வந்து திருஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது திருஞானசம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல,தலத்தினருகில் வந்ததும் பசு மறைதல்.
அரம்பை வழிபட்டத் தலம் - ரம்பையங்கோட்டூர் –இலம்பையங்கோட்டூர்

இலம்பை -  நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை


தலம்
திருஇலம்பையங்கோட்டூர்
பிற பெயர்கள்
எலுமியன்கோட்டூர், அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர், இலம்பையங்கோட்டூர்
இறைவன்
அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர். ரம்பாபுரிநாதர்
இறைவி
கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை, தாயினும் நல்லாள்,
தல விருட்சம்
மல்லிகை.
தீர்த்தம்
சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்
விழாக்கள்
குரு பெயர்ச்சி, மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,

அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்,
திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 -44 - 2769 2412, 09444865714, 9444429775
வழிபட்டவர்கள்
அரம்பை, சந்திரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 246 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   13 வது தலம்.

தெய்வநாயகேஸ்வரர்



கனககுஜாம்பிகை





பாடியவர்                திருஞானசம்பந்தர்                  
திருமுறை                1     
பதிக எண்                 76  
திருமுறை எண்           3    

பாடல்

பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்,
      பண்டுவெங்கூற்றுதைத்து  அடியவர்க்கருளும்
காலனாம்எனதுரை தனதுரையாகக், கனல் எரி
      அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய, நீர்மலர்க்
      குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர், இருக்கையாப்
      பேணி என்எழில் கொள்வதியல்பே.

பொருள்

சிவன் பாலன், முதியவர் மற்றும்  பசுபதி என்று பல வடிவங்கள் எடுத்து வந்தவன். அவன் கொடுமையான கூற்றுவனை காலால் உதைத்து அடியவர்களுக்கு அருளுபவன். அப்பெருமான எனது உரையை தனது உரையாக ஏற்றுக்கொண்டவன். எரியும் நெருப்பினை தனது கைகளில் ஏந்தியவன். பெரியதாகவும் இருக்கும்  நீல மலர்களை உடைய நீர் சுனைகளுக்கு அருகில் வண்டுகள் பாடுகின்றன. நீரில் இருக்கும் குவளை மலர்கள் மகரந்தத்தைப் பொழிகின்றன. அந்த இடம் மிக்க நறுமணம் உடையதாக இருக்கிறது. இவ்வாறான எழில்களை உடைய இலம்பையங் கோட்டுர் தலத்தில் உறையும் ஈசன் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?

கருத்து

·  ஈசன், உயிர்களின் தன்மைக்கு ஏற்ப  அவர்கள் விரும்பிய  வடிவம் தாங்கி வருபவன்



பாடியவர்                திருஞானசம்பந்தர்                  
திருமுறை                1     
பதிக எண்                 76  
திருமுறை எண்           8    

பாடல்

கிளர்மழை தாங்கினான் நான்முகம் உடையோன்
கீழ்அடிமேல் முடி தேர்ந்து அளக்கில்லா
உளம்அழை எனதுரை தனதுரையாக
ஒள்ளழல் அங்கையில் ஏந்தியஒருவன்
வளமழை எனக்கழை வளர்துளி சோர
மாகணம் உழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே

பொருள்


மிகப் பெரியதாக கிளர்ந்து எழுந்த மழையை தன் கைகளால் தாங்கி துயர் துடைத்த திருமாலும், பிரம்மாவும் ஈசனின்  திருவடியையும்  மேல்  முடியையும் தரிசிக்க விரும்பி அதனை அடைய இயலாதவர்களாக இருந்தார்கள். அந்த ஈசன் எனது உரையை தனது உரையாக ஏற்றவன். அவன் ஒளிரும் நெருப்பினை தன் கரங்களில் ஏந்தியவன். மூங்கில் இலைகளிலிருந்து மழையெனத் துளிகள் வீழவும் மலைப்பாம்புகள் பக்கம் சார, அழகிய மணி மாலைகள் போல் தவழ் பொழில் திகழும் இலம்பையங்கோட்டூரில் உறையும் அப்பெருமான் என் எழில் கொள்வது நல்லியல்பு ஆகுமா?

புகைப்படம் : தினமலர்

Thursday, August 6, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருமாகறல்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருமாகறலீஸ்வரர்

   இறைவன் நவபாஷாணத்தால் ஆன‌ சுயம்பு மூர்த்தி
   கஜ பிருஷ்ட  விமான அமைப்பு
   முருகனும், தெய்வயானையும் வெள்ளையானையில் அமர்ந்து மகாவிஷ்ணுவுக்கு காட்சி
   திருஞானசம்பந்தர் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலம்
   இறைவன் மாகறலீஸ்வரர் உடும்பின் வால் போன்ற காட்சி.
   பிரம்மா தலம் எல்லையில் பலா மரம் தோற்றுவித்தது. இராஜேந்திர சோழன் அப்பழங்களை தினமும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்தது. அந்தணன் மகன் அதனை வெட்டியது. இராஜேந்திர சோழன் அதற்காக நாடு கடத்தியது. உறுதி செய்து திரும்பும் போது பொன்னிற உடும்பைக் கண்டது. அதனை வெட்ட முயன்று மயக்கம் அடைந்த தருணம் இறைவன் வெளிப்பட்டு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டது.

   பைரவர்  - அர்த்தநாரி பைரவர் வடிவம்


தலம்
திருமாகறல்
பிற பெயர்கள்
அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர், நிலையிட்ட நாதர், தடுத்தாட்கொண்டவர்
இறைவன்
திருமாகறலீஸ்வரர்
இறைவி
திரிபுவனநாயகி
தல விருட்சம்
எலுமிச்சை
தீர்த்தம்
அக்னி
விழாக்கள்
மாசி மாதம்  - பிரம்மோற்ஸவம்.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் -631 603, காஞ்சிபுரம் மாவட்டம்.
 +91- 044-27240294
வழிபட்டவர்கள்
பிரம்மா , மகாவிஷ்ணு, மாகறன், மலையன் என்னும் அசுரர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 239 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   7 வது தலம்.

திருமாகறலீஸ்வரர்



திரிபுவனநாயகி



பாடியவர்          திருஞான சம்மந்தர்          
திருமுறை         3            
பதிக எண்         72         
திருமுறை எண்    9           

பாடல்

தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே

பொருள்

தூய்மையான  தாமரை மலர்கள், கழு மலர்கள், நெய்தல் மலர்கள், குவளை மலர்கள் போன்ற மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அதில் இருக்கும் தேனை பருகுவதற்காக வரிகளை உடைய வண்டுகள் பாடி வருகின்றன. இத்தகைய திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறான். அவன் தனது கால் பெருவிரல் ஊன்றி இராவணின் வலிமையை அழித்தவன்.இவ்வாறாக வீற்றிருக்கும் பெருமானின் புகழை பாடுவதால் வினைகள் யாவும் நீங்கும் என்பது முடிவானது.

கருத்து

சாய - வலி குறையும்படி.

பாடியவர்          திருஞான சம்மந்தர்          
திருமுறை         3            
பதிக எண்         72         
திருமுறை எண்    10           

பாடல்

காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே

பொருள்

சிவன், பைம் பொன்னால ஆன வீரக் கழல்களை அணிந்தவாறும், நீண்ட சடை முடியும் உள்ளவனாக விருப்பமுடன் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்ட திருமாலும், பிரம்மாவும் அறியாதவாறு நெருப்பு பிழம்பாகி இத்தலத்தில் வீற்றிருக்கிறான்.நாலிடத்தில் எரிகின்ற நெருப்பை கொண்டும், தோலை உரித்து மாணிக்கத்தை கக்கும் பாம்பை அணிந்தும், அசைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடைப அந்த சிவபெருமானின் அடியார்களை வினைகள் வந்து அடையாது.


புகைப்படம் : இணையம்,தினமலர்