Thursday, December 31, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருவோத்தூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருவோத்தூர்

சதுர ஆவுடையார்
இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' – திருவோத்தூர்
சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம்
ரத ஸப்தமி அன்று சூரிய ஒளி சுவாமி மீது விழும்.
முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, ஆண்பனை, பெண்பனையான தலம்
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை கற்றுத்தரும் போது அவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக வரலாறு

தொண்டைமான் விசுவாவசு என்னும் மன்னனிடம் தோற்ற பொழுது அவன் வெற்றிபெறுவதற்காக நந்தியை படைத் துணையாக அனுப்பிய இடம். இதன் பொருட்டு நந்தி முன் கோபுரம் நோக்கியவாறு.



தலம்
திருவோத்தூர்
பிற பெயர்கள்
செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர்
இறைவன்
வேதபுரீஸ்வரர், வேதநாதர்
இறைவி
பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி
தல விருட்சம்
பனை
தீர்த்தம்
ஆலயத்திற்கு வெளியே சேயாறு, வெளிப் பிராகாரத்தில் கல்யாணகோடி தீர்த்தம், மானச தீர்த்தம்,
விழாக்கள்
தை மாதம்பிரம்மோற்சவம், ஆடி மாதம் - லட்ச தீபம், ஆடி விசாகம் - ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம் சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம்,
மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோஷம்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரை

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவத்திபுரம்

செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 604407
04182 – 224387
வழிபட்டவர்கள்
தொண்டைமான்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் - 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   8 வது தலம்.


வேதபுரீஸ்வரர்



இளமுலைநாயகி



பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      8        

பாடல்

என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.

பொருள்

கயிலை மலை குறித்து குறைவாக மதிப்பிட்டு செறுக்கு கொண்ட இராவணனை தனது கால் பெருவிரலால் வென்றவரும், தனது மனதில் இருந்து மாறுபட்டவர்களான மூன்று கோட்டைகள் கொண்ட மூன்று  அசுரர்களை திரிபுர தகனம் அழித்தவரும் ஆகிய ஈசன் உறையும் தலமாகிய திருவோத்தும் எனும் ஊர்ப் பெயரைச் சொன்ன அளவில் அவர்களிடத்து இருக்கும் வினைகள் நீங்கும்.

கருத்து

என்தான் - எம்மாத்திரம். ஒன்னார் - பகைவர்


பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      9        

பாடல்

நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.

பொருள்

திருவோத்தூரில் விளங்கும் இறைவரே!  நான்கு வேதங்களை அதன் பொருள் உணர்ந்து ஓதுபவனாகிய பிரமன், திருமால் ஆகியோர் நீ ஏக உருவில் தீப்பிழம்பாய் இருத்தலை கண்டு அறியாமையினால் திசைகள் எல்லாம் தேடி அலைந்தனர். அவர்களது அறிவுநிலை யாது?

கருத்து
நன்றாம் நான் மறையான் - நல்லன செய்யும் நான்மறைகளை ஓதியும்


Reference

தவர்வாள் தோமர சூலம் காதிய சூருந் - எனத் தொடங்கும் திருப்புகழ்

' உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்  ' எனத் தொடங்கும் திருஅருட்பிரக்காச வள்ளளாரின் ஐந்தாம் திருமுறை

புகைப்படம் : தினமலர்

இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

Sunday, November 22, 2015

ஆதி சித்தனின் அரங்கேற்றம்


நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க

சம்பவம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வாசுகி ஆலகால விஷத்தை வெளிப்படுத்தியது. அதனை ஈசன் உண்டான். சத்தி தடுத்து நிறுத்தியதால் அது கழுத்தில் தங்கி விட்டது.

விளக்கம்

ஈசனானவர் எங்கும் நிறைந்தவர், பிறப்பிலி. மனித வாழ்வின் பிறப்பு மற்றும் இறப்பினை அவர்களின் மூச்சுக் காற்றே தீர்மானிக்கிறது.கழுத்தின் கண்டத்திற்கு மேல் வாசி பயில்பவர்கள் இறை தன்மையினை அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பில்லை. கழுத்துக்கு கீழே வாசி பயில்பவர்கள் உடல் ரீதியான மற்றும் மனரீதியான முன்னேற்றம் அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பு உண்டு.

இறை தன் நிலையிருந்து என்றும் வழுவாதிருக்க வாசியோகத்தின் முழுமையினை வெளிப்படுத்த ஈசனும் இறைவியும் நடத்திய நாடகம் அது.


மேலும் அறிய விரும்புவர்கள் குரு முகமாக அறிந்து கொள்க.

புகைப்படம் : இணையம்

Thursday, November 19, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருகுரங்கணில் முட்டம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருகுரங்கணில் முட்டம்

இறைவன் சுயம்பு மூர்த்தி
வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்ற தலம்
விஷ்ணு துர்க்கை - வலது கையில் பிரயோகச் சக்கரம்,இடக்கையில் சக்கர முத்திரை, காலுக்கு கீழே மகிஷாசுரனும் அற்று.

சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது



தலம்
திருகுரங்கணில் முட்டம்
பிற பெயர்கள்
கொய்யாமலை
இறைவன்
வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர், திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார், கொய்யாமலர் ஈசுவரதேவர்
இறைவி
இறையார் வளையம்மை, இளையாளம்மன், ஸ்ரீ பூரணகங்கணதாரணி
தல விருட்சம்
இலந்தை மரம்
தீர்த்தம்
காக்கை தீர்த்தம், வாயசை தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 9 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
குரங்கனில் முட்டம் கிராமம்
தூசி அஞ்சல்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் – 631703
ஸ்ரீதர் குருக்கள், கைபேசி:9629050143, 9600787419
வழிபட்டவர்கள்
வாலி, இந்திரன், யமன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் - 1
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 238 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   6 வது தலம்.

வாலீஸ்வரர்




இறையார் வளையம்மை




பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        8    

பாடல்

மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.


பொருள்

மையின் நிறத்தை ஒத்து இருக்கும் கரிய  நிறமுடைய மேனியை உடையவனாகிய அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி, அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும். அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்

கருத்து

மையார்மேனி - கரியமேனி.
அரக்கன் - இராவணன். .
கொய் ஆர் மலர் - கொய்தலைப் பொருந்திய மலர்.


பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        9    


பாடல்

வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.

பொருள்

மணம் உடைய தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் முறையே திருமுடியையும், திருவடியையும் அறிய முடியாது வருந்தி நிற்க தீயின் உருவமாய் நிற்கும் சிவபெருமான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக தொழுபவர்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெறும்.

கருத்து

அறியாது அசைந்து - முதற்கண் இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து
ஏத்த - பின்னர் அறிந்து துதிக்க
ஓர் ஆர் - தனக்கு ஒப்பில்லாதவன்
நெறி – ஆகமவிதி - தனக்கு விதிக்கப்பட்டவாறு தொழுதல்

புகைப்படம் : தினமலர்

Wednesday, November 11, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி


மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி

வடிவம்(பொது)

·   நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் கோபம் இரண்ய  சம்ஹாரத்திற்குப் பிறகும் குறையவில்லை. அதன் பொருட்டு  சிவபெருமான் எடுத்த அவதாரம் `சரபமூர்த்தி'
·   சரபம் என்பது மனிதன், யாளி, பட்சி, இம்மூன்றும் கலந்த உருவம். .
·   உடல் அமைப்பு  - சிம்ம முகம், சிம்ம உடல், எட்டுக்கால், எட்டுக்கை, ஆயுதமாக மான், மழு, சூலினி, ப்ரத்யங்கிரா தேவியர் – இறக்கைகள், சூரியன், சந்திரன், அக்னி -  கண்கள்,துடிக்கும் நாக்கு, தூக்கிய  காதுகள், கருடமூக்கு, நான்கு கரங்கள், எட்டு கால்கள், அதில் காந்தசக்தி கொண்ட நகங்கள்
·   உத்திர காமிகாகமத்தின்படி இவ்வடிவம் ஆகாச பைரவர்
·   சில இடங்களில் 32 கைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்.
·   சில இடங்களில் இம் மூர்த்தம் மகேசுவர பேதமாக குறிப்பிடப்படுகிறது.

வேறு பெயர்கள்

·         ஸ்ரீ சரபேஸ்வரர்
·         ஸ்ரீ சரப மூர்த்தி
·         புள்ளுருவன்
·         எண்காற் புள்ளுருவன்
·         சிம்புள்
·         நடுக்கந்தீர்த்த பெருமான்
·         சிம்ஹாரி
·         நரசிம்ம சம்ஹாரர்
·         ஸிம்ஹக்னர்
·         சாலுவேசர்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருபுவனம், மயிலாடுதுறை
·         தாராசுரம், கும்பகோணம்
·         ஆபத்சகாயேசுவரர் கோயில்,துக்காச்சி,கும்பகோணம்
·         தேனுபுரீஸ்வரர் ஆலயம்,மாடம்பாக்கம், சென்னை
·         ஆலய மூலவர் - ஸ்தம்ப சரபேஸ்வரர்,திரிசூலம், சென்னை
·         ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம்,மயிலாப்பூர்
·         குறுங்காலீஸ்வரர் கோயில்,கோயம்பேடு
·         தாமல் நகர், காஞ்சிபுரம்  -  லிங்க உருவ சரபேஸ்வரர்
·         மதுரை, சிதம்பரம், காரைக்குடி –
·         சராவு சரபேஸ்வரர் ஆலயம், மங்களூர்

இதரக் குறிப்புகள்

·         16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட  சரப புராணம்

புகைப்படம் : இணையம்