தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருகுரங்கணில் முட்டம்
•
இறைவன்
சுயம்பு மூர்த்தி
•
வாலி
குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இறைவனை
தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்ற தலம்
•
விஷ்ணு
துர்க்கை - வலது கையில் பிரயோகச் சக்கரம்,இடக்கையில் சக்கர முத்திரை, காலுக்கு கீழே
மகிஷாசுரனும் அற்று.
•
சித்திரை
மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது
தலம்
|
திருகுரங்கணில் முட்டம்
|
பிற பெயர்கள்
|
கொய்யாமலை
|
இறைவன்
|
வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர்,
திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார், கொய்யாமலர்
ஈசுவரதேவர்
|
இறைவி
|
இறையார் வளையம்மை, இளையாளம்மன்,
ஸ்ரீ பூரணகங்கணதாரணி
|
தல விருட்சம்
|
இலந்தை மரம்
|
தீர்த்தம்
|
காக்கை தீர்த்தம், வாயசை தீர்த்தம்
|
விழாக்கள்
|
|
மாவட்டம்
|
திருவண்ணாமலை
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 9 மணி
வரை
மாலை 4 மணி முதல் இரவு
7 மணி வரை
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
குரங்கனில் முட்டம் கிராமம்
தூசி அஞ்சல்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் –
631703
ஸ்ரீதர் குருக்கள், கைபேசி:9629050143,
9600787419
|
வழிபட்டவர்கள்
|
வாலி, இந்திரன், யமன்
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர் - 1
|
நிர்வாகம்
|
|
இருப்பிடம்
|
காஞ்சிபுரம் - வந்தவாசி
சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 238 வது
தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 6 வது தலம்.
|
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 31
திருமுறை
எண் 8
பாடல்
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.
பொருள்
மையின் நிறத்தை
ஒத்து இருக்கும் கரிய நிறமுடைய மேனியை உடையவனாகிய
அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி,
அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில்
எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும்.
அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்
கருத்து
மையார்மேனி
- கரியமேனி.
அரக்கன்
- இராவணன். .
கொய் ஆர்
மலர் - கொய்தலைப் பொருந்திய மலர்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 31
திருமுறை
எண் 9
பாடல்
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந்
தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந்
தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு
வார்வினை நிற்ககி லாவே.
பொருள்
மணம் உடைய
தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் முறையே திருமுடியையும், திருவடியையும்
அறிய முடியாது வருந்தி நிற்க தீயின் உருவமாய் நிற்கும் சிவபெருமான் விளங்கும் குரங்கணில்
முட்டத்தை முறையாக தொழுபவர்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெறும்.
கருத்து
அறியாது
அசைந்து - முதற்கண் இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து
ஏத்த - பின்னர்
அறிந்து துதிக்க
ஓர் ஆர்
- தனக்கு ஒப்பில்லாதவன்
நெறி – ஆகமவிதி
- தனக்கு விதிக்கப்பட்டவாறு தொழுதல்
புகைப்படம் : தினமலர்
புகைப்படம் : தினமலர்
No comments:
Post a Comment