Tuesday, August 26, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 6/25 பிட்சாடனர்

வடிவம்

·   உருவத் திருமேனி
·   தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிக்க எடுத்த திருக்கோலம்
·   பிறந்த மேனியோடு இருக்கும் கோலம்
·   சிவனுக்குரிய அனைத்து ஆபரணங்களும்.
·   இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம்.
·   கைகளில் பிரம்ம கபாலப் பாத்திரம் 
·   தொடரும்  பூதகணம் தலையில் பிச்சைப் பாத்திரத்துடன்
·   தலையில் ஜடாபாரம் அணிந்து, பிறைச் சந்திரன்
·   அருகில் ரிஷி பத்தினி
·   இடையில் சர்ப்ப மேகலை
·   முன் இடது கையில் கபாலமம்,
·   முன் வலது கை மான் அல்லது மானிற்கு அருகம்புல் தருவது போல்
·   பின் வலத் திருக்கரத்தில்  நாகத்தைப் பிடித்தவாறு அல்லது டமரு
·   பின் இடத் திருக்கரத்தில் சூலம்
·   வலது கால் -  வீரக் கழலுடன்
·   மேனியில் அணிந்துள்ள பாம்புகள்  - யோக சாதனைகள்
·   பாதச் சிலம்பு  - ஆகமங்கள்
·   பாதுகைகள் - வேதங்கள்
·   கோலம் காட்டும் ஐந்து தொழில்கள்
Ø  உடுக்கை ஒலி -உலக சிருஷ்டி
Ø  திரிசூலம் - அழித்தல்
Ø  மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்
Ø  குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்
Ø  கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.
·   சிவனின் தத்புருஷம் முகத்தினை சார்ந்தது
·   ப்ரம்மனின் தலை கொய்ததற்காக ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக காசி சென்று அன்ன பூரணியிடம் பிச்சை ஏற்ற பிறகு ப்ரம்மஹத்தி தோஷ நிவர்த்தி
·   வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய பஞ்ச குணங்களில்  வசீகர மூர்த்தி
·   இதன் வேறு வடிவம் கஜ சம்ஹார மூர்த்தி

வேறு பெயர்கள்
பிச்சை உவக்கும் பெருமான்
பிச்சாடனர்
பிச்சாண்டை
பிச்சாண்டவர்
பிச்சதேவர்
பிச்சைப் பெருமான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

Ø திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு (மேலப்பெரும்பள்ளம் - வீணை ஏந்திய கோலம்) ஆகிய கோயில்களில் உலோகத் திருமேனி
Ø காஞ்சிக் கைலாசநாதர்
Ø திருவையாறு
Ø திருவிடைமருதூர்
Ø குடந்தை
Ø பந்தநல்லூர்
Ø திருப்பராய்த்துறை
Ø உத்தமர் கோயில்
Ø கங்கைகொண்ட சோழபுரம்
Ø திருவட்டது​றை - எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தி
Ø சிந்தாமணி - விழுப்புரம் மாவட்டம்
Ø திருவீழிமிழலை
Ø அயனீஸ்வரம் - அம்பாசமுத்திரத்திம்,  திருநெல்வேலி
Ø திருஉத்தரகோசமங்கை

இதரக் குறிப்புகள்
1.
ஐந்து வகை பிச்சாடனர்கள் சிலை வடிவங்கள்
நகாரச்சிலை
மகாரச்சிலை
சிகாரச்சிலை
வாகாரச்சிலை
யகாரச்சிலை
* முதல் எழுத்துக்கள் ஊழி முதல்வனைக் குறிக்கும் சொற்கள்

2.
காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் இரண்டு கைகளைக் கொண்ட பிட்சாடனர் படிமம் - கிபீஞ்சையும் (மயில்தோகைக் கற்றை) அக்க மாலையைப் பிடித்தவாறு சின்முத்திரை

3.
சான்றுகள்
காசியப சில்பசாஸ்திரம்,
சகளாதிகாரம்,
ஸ்ரீதத்துவநிதி
அம்சுமத்பேதாகமம்,
காமிகம்,
காரணாகமம்,
சில்ப ரத்தினம்
திருஞானசம்மந்தர் தேவாரம் - 3.100.1
கந்தபுராணம்,
திருவிளையாடற்புராணம்,
காஞ்சிப் புராணம்

4.
சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் கோலம்

5.
சோழர் கலை வடிவங்களில் முக்கிய வடிவம்

6.
பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரங்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே

பரந்த ஏழு உலகங்களையும் உண்டாக்கிய இறைவனை இரந்து பிழைப்பவன் என்று  கூறுகிறார்கள். தன்னை நினைக்கும் அடியார்கள் பிச்சை எடுத்து உண்டு தன் திருவடியை அடையச் செய்வதற்காகவே அவன் அவ்வாறு இருக்கிறான். -  திருமூலர்.

Image : saivasiddhanta.in
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

No comments:

Post a Comment