வடிவம்
கேசாதி பாதமாக
முகம் - சாந்த சொருபம்
கூந்தல் அருகினில் நாகம் - கால சக்கரம்
கங்கை - அருளுதலை முடிவறச் செய்பவன்.
பிறைச் சந்திரன் - தீங்கு இழைத்தவர்களையும் மன்னித்து அருளுதல்
வலப்புற மேற்கை – டக்கா என்ற உடுக்கை(ப்ரணவ நாதம் தோற்றம்) – படைத்தல்
இடப்புற மேற்கை – தீச்சுவாலை – அழித்தல்
வலப்புற கீழ்க்கை - அபய முத்திரை – காத்தல்
இடப்புற கீழ்க்கை - தும்பிக்கை நிலை (கஜ ஹஸ்தம்) – மறைத்தல்
சில இடங்களில் கைகளில் மான் - மனம் நிலையற்று இறைவனிடத்தில் மட்டும் ஒடுங்குதலைக் குறிக்கும்.
ஊற்றிய வலது கால் - த்ரோதண சக்தி - உயர் ஞானத் தேடல்
வலது கால் கீழ் - அபஸ்மாரன் அசுரன்(முயலகன் என்றும் கூறுவாரும் உண்டு) - முற்றுப்பெறா காமம்
தூக்கிய இடது கால் - ஆணவம் மற்றும் மாயை
குண்டலி சக்தி என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.
புலித்தோல் - இயற்கையை அணிதல்
நெருப்பு வட்டம் - ப்ரபஞ்ச நடனம்
நெருப்பு வட்டம் ஒவ்வொன்றும் மூன்று சிறு ஜ்வாலைகள் கொண்டது. அவை முறையே தோற்றம், இருப்பு மற்றும் முடிவு.
நெருப்பு வட்டத்திற்கும் எண்ணிக்கை உண்டு.
உடுக்கை ஒலி முனிவர்களுக்கு ஏற்றவாறு
பரதமுனி - நாட்டியம்
நாரதமுனி - சங்கீதம்
பாணினிமுனி - வியாகரணம்
பதஞ்சலிமுனி – யோகம்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவாலங்காடு - ரத்தின சபை –கால் மாற்றி நடனம்
சிதம்பரம் - கனகசபை
மதுரை - ரஜிதசபை (வெள்ளி சபை) – கால் மாற்றி நடனம்(பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி)
திருநெல்வேலி - தாமிரசபை - திருநெல்வேலி
சித்திரசபை - திருக்குற்றாலம்
திரு உத்திரகோச மங்கை – மரகதத்திருமேனி
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் விளாகம் - ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜர்
பேரூர் பட்டீஸ்வரர்
தஞ்சை பெரிய கோவில்
மற்றும் எல்லா சிவாலயங்கள் ((பட்டியல் முடிவற்றதாகிறது)
சிறப்புகள்
கூத்தன் - கூத்துக்களை செய்பவன்
அம்பல வாணன் - அம்பலத்தில் ஆடுபவன்
நட ராஜன் - ஆடல் கலையில் அரசன்
சபேசன் - சபைகளில் ஆடுபவன்.(5 சபைகள் )
இதரக் குறிப்புகள்
அருணகிரி நாதருக்கு திருச்செந்தூரில் காட்சி
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை;
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா;
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
“என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்
No comments:
Post a Comment