Tuesday, August 26, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 6/25 பிட்சாடனர்

வடிவம்

·   உருவத் திருமேனி
·   தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிக்க எடுத்த திருக்கோலம்
·   பிறந்த மேனியோடு இருக்கும் கோலம்
·   சிவனுக்குரிய அனைத்து ஆபரணங்களும்.
·   இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம்.
·   கைகளில் பிரம்ம கபாலப் பாத்திரம் 
·   தொடரும்  பூதகணம் தலையில் பிச்சைப் பாத்திரத்துடன்
·   தலையில் ஜடாபாரம் அணிந்து, பிறைச் சந்திரன்
·   அருகில் ரிஷி பத்தினி
·   இடையில் சர்ப்ப மேகலை
·   முன் இடது கையில் கபாலமம்,
·   முன் வலது கை மான் அல்லது மானிற்கு அருகம்புல் தருவது போல்
·   பின் வலத் திருக்கரத்தில்  நாகத்தைப் பிடித்தவாறு அல்லது டமரு
·   பின் இடத் திருக்கரத்தில் சூலம்
·   வலது கால் -  வீரக் கழலுடன்
·   மேனியில் அணிந்துள்ள பாம்புகள்  - யோக சாதனைகள்
·   பாதச் சிலம்பு  - ஆகமங்கள்
·   பாதுகைகள் - வேதங்கள்
·   கோலம் காட்டும் ஐந்து தொழில்கள்
Ø  உடுக்கை ஒலி -உலக சிருஷ்டி
Ø  திரிசூலம் - அழித்தல்
Ø  மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்
Ø  குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்
Ø  கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.
·   சிவனின் தத்புருஷம் முகத்தினை சார்ந்தது
·   ப்ரம்மனின் தலை கொய்ததற்காக ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக காசி சென்று அன்ன பூரணியிடம் பிச்சை ஏற்ற பிறகு ப்ரம்மஹத்தி தோஷ நிவர்த்தி
·   வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய பஞ்ச குணங்களில்  வசீகர மூர்த்தி
·   இதன் வேறு வடிவம் கஜ சம்ஹார மூர்த்தி

வேறு பெயர்கள்
பிச்சை உவக்கும் பெருமான்
பிச்சாடனர்
பிச்சாண்டை
பிச்சாண்டவர்
பிச்சதேவர்
பிச்சைப் பெருமான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

Ø திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு (மேலப்பெரும்பள்ளம் - வீணை ஏந்திய கோலம்) ஆகிய கோயில்களில் உலோகத் திருமேனி
Ø காஞ்சிக் கைலாசநாதர்
Ø திருவையாறு
Ø திருவிடைமருதூர்
Ø குடந்தை
Ø பந்தநல்லூர்
Ø திருப்பராய்த்துறை
Ø உத்தமர் கோயில்
Ø கங்கைகொண்ட சோழபுரம்
Ø திருவட்டது​றை - எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தி
Ø சிந்தாமணி - விழுப்புரம் மாவட்டம்
Ø திருவீழிமிழலை
Ø அயனீஸ்வரம் - அம்பாசமுத்திரத்திம்,  திருநெல்வேலி
Ø திருஉத்தரகோசமங்கை

இதரக் குறிப்புகள்
1.
ஐந்து வகை பிச்சாடனர்கள் சிலை வடிவங்கள்
நகாரச்சிலை
மகாரச்சிலை
சிகாரச்சிலை
வாகாரச்சிலை
யகாரச்சிலை
* முதல் எழுத்துக்கள் ஊழி முதல்வனைக் குறிக்கும் சொற்கள்

2.
காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் இரண்டு கைகளைக் கொண்ட பிட்சாடனர் படிமம் - கிபீஞ்சையும் (மயில்தோகைக் கற்றை) அக்க மாலையைப் பிடித்தவாறு சின்முத்திரை

3.
சான்றுகள்
காசியப சில்பசாஸ்திரம்,
சகளாதிகாரம்,
ஸ்ரீதத்துவநிதி
அம்சுமத்பேதாகமம்,
காமிகம்,
காரணாகமம்,
சில்ப ரத்தினம்
திருஞானசம்மந்தர் தேவாரம் - 3.100.1
கந்தபுராணம்,
திருவிளையாடற்புராணம்,
காஞ்சிப் புராணம்

4.
சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் கோலம்

5.
சோழர் கலை வடிவங்களில் முக்கிய வடிவம்

6.
பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரங்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே

பரந்த ஏழு உலகங்களையும் உண்டாக்கிய இறைவனை இரந்து பிழைப்பவன் என்று  கூறுகிறார்கள். தன்னை நினைக்கும் அடியார்கள் பிச்சை எடுத்து உண்டு தன் திருவடியை அடையச் செய்வதற்காகவே அவன் அவ்வாறு இருக்கிறான். -  திருமூலர்.

Image : saivasiddhanta.in
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Thursday, August 21, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

பதி, பசு, பாசம் ஆகியவை ஞானத்தால் அடையப்பெறுகின்றன எனில் சரியை, கிரியை, யோகம், எதற்கு?

ஞானம் ஆன்மாவின் குணம். இந்த ஞானம் தேகம், இந்திரியம், பிராணன் மற்றும் கரணம் இவற்றோடு கலவாத போது அது அதன் குணத்தில் இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் தேகம் மற்றும் முன் கூறியவற்றோடு கூடி(கண், காது, மனம், புத்தி இன்ன பிற), அதன் தன்மையை இழக்கிறது.

இவ்வாறு விஷ சுகத்தில் பட்டு கீழ்வழிக்கு இழுத்துச் செல்லும் தேகாதி இந்திரியங்களை தடுத்து பர சுக வாழ்வினில் பதித்திடச் செய்தலே சரியை, கிரியை மற்றும் யோகத்தின் பண்பாகும்.

சரியை  - தேகத்தை ஈஸ்வர விஷயத்தில் செலுத்துதல்
கிரியை -  இந்திரியங்களை செலுத்துதல்
யோகம் -  பிராணாந்தக்கரணங்களை செலுத்துதல்
ஞானம்  - ஈஸ்வரனிடத்தில் அடங்குதல்

சரியை, கிரியை, யோகம் ஆகியவைகள் முதல் நிலைகள். இவைகளை அடைந்த பின்னரே ஞானம் என்ற உயர் நிலையை அடைய முடியும்

வேதத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. சிவாகமத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. எனில் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபாடு உள்ளதா?
வேதம் சுருங்கச் சொல்லும். சிவாகமம் விரிவாகச் சொல்லும்.

வேதம் மற்றும் சிவாகமம் ஆகியவை ஈஸ்வரனை  குறிப்பிடுகின்றன. எனில் எதற்காக இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்? இரண்டில் ஒன்று தேவையற்றதா?



வேதம்
சிவாகமம்
புருஷாத்தங்கள்
அறம், பொருள், இன்பம், வீடு
வீடு
உலகம்
உலகர்
சத்திநிபாதர்
வீடு சொரூப விளக்கம்
இல்லை
உண்டு
நூல் வகை
மூவுலக நூல்
வீட்டு நூல்


வேதம் வழியே ஞானம் விளைகிறது. ஞானம் அடைய முதல் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். எனவே இவை இரண்டுமே தேவைப்படுகின்றன.


மகேசுவரமூர்த்தங்கள் 5/25 சந்திரசேகரர்


வடிவம்
சந்திரனை தலையில் தரித்த கோலம்(சேகரன் - காப்பாற்றுபவன். சந்திரனைக் காப்பவன்)
உருவத்திருமேனி
போக வடிவம்
திருக்கரங்கள் - மான், மழு,அபய ஹஸ்தம், ஊரு(தொடை) ஹஸ்த முத்திரை. கையைத் தொடையில் பதிந்த வண்ணம் காட்சி
கேவல சந்திரசேகர் -  தனித்த நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரன்.
உமா சந்திரசேகர் - உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரன்.
ஆலிங்கண சந்திரசேகர்- சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவியநிலை


வேறு பெயர்கள்
பிறையோன்
பிறை சூடிய பெம்மான்
தூவெண்மதிசூடி
பிறையன்
மதிசெஞ்சடையோன்
இந்து சேகரன்
பிறைசூடி
மாமதிசூடி
சந்திர மௌலீஸ்வரர்,
சசிதரர் ,
சோம சுந்தரர்,
சசி மௌலீஸ்வரர்,
சோமநாதர்,
சசாங்க சேகரர்,
சசிசேகரர்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவீழிமிழலை
திருவான்மியூர்
வேங்கீஸ்வரம்
திருச்செந்துறை
திருப்புகலூர்- அக்னி பகவான் தவம் செய்து பாப விமோசனம் பெற்ற இடம்.
கம்பத்தடி மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை
அரம் பையங்கோட்டூர் (இலம்பையங்கோட்டூர்)
வவுனியா செட்டிக்குளம், இலங்கை

பெரும்பாலான சிவாலயங்களில் உற்சவ மூர்த்தி
மார்க்கண்டேயர் இயற்றியது -  சந்திரசேகர அஷ்டகம்

Image : Internet

உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Wednesday, August 20, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருவெண்பாக்கம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருவெண்பாக்கம்

·   கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தி
·   சுந்தரருக்கு ஊன்றுகோல் ஈந்ததால் ஊன்றீஸ்வரர்
·   கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்த காட்சி
·   சுந்தரரின் கண்பார்வைக்கு ஊழ்வினையே என்று கூறி மின்னல் கீற்று போல் ஒளி காட்டியவள் - மின்னொளி அம்பாள்

·   பைரவர் எட்டு கைகளுடன்








தலம்
திருவெண்பாக்கம் (பூண்டி)
பிற பெயர்கள்
பழம்பதி, திருவெண்பாக்கம்
இறைவன்
ஊன்றீஸ்வரர். ஆதாரதாண்டேசுவரர் ,சோமாஸ்கந்தர்
இறைவி
மின்னொளி அம்பாள், கடிவாய்மொழியம்மை, . தடித் கௌரி அம்பாள்
தல விருட்சம்
இலந்தை
தீர்த்தம்
குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்
விழாக்கள்
சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்,
பூண்டி - 602 023,  
+91- 44 - 2763 9725, 2763 9895. - 9245886900
பாடியவர்கள்
சுந்தரர்,
நிர்வாகம்
இருப்பிடம்
திருவள்ளூரில் இருந்து - 12 கி.மி.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   17 வது தலம்.

ஊன்றீஸ்வரர்



மின்னொளி அம்பாள்




பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    089
திருமுறை எண்               1

பாடல்

பிழையுளன பொறுத்திடுவர்
    என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
    படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
    கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்
    துளோம்போகீர் என்றானே

பொருள்

குழை என்ற காதணிகலன்களை அணிந்த உடையவனே, உலகியல் வழக்கால் பிழைகள் எனப்படுகின்றவைகளை பிழை என்று எண்ணாமல் நம் பிழைகளை பெருமானார் பொருத்துக் கொள்வார் என்று எண்ணி நான் அவைகளை செய்தேன். அவ்வாறு இல்லாமல் பிழைகளை நீ பொறாததால் உனக்கு உண்டாகும் பழியை பற்றி கவலைப்படாமல் என் கண்களை மறைத்து விட்டாய். பார்வை இல்லாததால் 'இக்கோயிலில் இருக்கிறாயா' என்று வினவ, மானை கரங்களில் ஏந்தியவன் 'உள்ளோம், போகீர்'  என்றானே. இது தானே அவனது கருணை.


கருத்து
திருவாரூர் வாழ்ந்து போதீரே – வடிவம்
படலம் -  கண்ணில் படர்ந்து ஒளியை மறைப்பதொன்று
மறைப் பித்தாய் - மறைவித்தாய்
உளாயே - வினா ஏகாரம்
போகீர் ` என்றது இறைவர் அருளிச்செய்த சொல்லை அவ்வாறே சுந்தரர் கூறியது.


பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    089
திருமுறை எண்               10

பாடல்

மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே


பொருள்
மான் போன்ற கழுத்தினை உடைய சங்கிலியை எனக்கு தந்து, அதனால் விளையும் பயன்களை நான் புரிந்து கொள்ளுமாறு அருள் செய்தாய். உலகத்தை ஈன்றவனே, நீ இங்கி இருக்கிறாயா என்று நான் வினவ, ஊன்றுவதற்கு ஒரு கோலை அருளி, 'உள்ளோம், போகீர்'  என்றானே. இது தானே அவனது கருணை.


கருத்து

அருள் செய்தளித்தாய் - அருளுதல் + செய்தல்+ அளித்தல், மற்றொரு பொருளில் அருளிச் செய்தல்+அளித்தல்,
வருபயன்கள் - கன்மானுபவம்

புகைப்படம் - இணைய தளங்கள்