Tuesday, January 31, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - வெட்டாத சக்கரம்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  வெட்டாத சக்கரம்

வார்த்தைவெட்டாத சக்கரம்
பொருள்

·         சஹஸ்ராரத் தாமரை
·         விமலையவள் பீடம்
·         வாலை பீடம்
·         உச்சி("ய"கரமாகிய புருவமத்தி)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே?

பட்டினத்தார்

அகக்கண் கொண்டு அறியப்படும் விஷயம் இது. சக்கரம் செய்யப்பட வேண்டும் எனில் ஏதாவது ஒரு இடத்தில் வெட்டப்பட வேண்டும். (ஞானத்தினால் இது வெட்டாமல் அறியப்படும்). பேசாத மந்திரம் என்பதால் மௌன ஜபத்தினால் அறியப்படும் ஆயிரம் இதழ் தாமரை ஆயினாலும் மற்றொருவரால் பறிக்கமுடியாத புஷ்பம். தாமரை தண்ணில் இருக்கும். அது போலவே அது அமிர்தத்தில் இருக்கும். (ஞானம் அடைந்தவரே அதைப்பருகி மரணமில்லா பெருவாழ்வு அடைவர். கட்டாத லிங்கம் - குரு முகமாக அறிக. கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ - அஜபா நிலையில் செய்யப்படும் பூஜை முறை. இவ்வாறு இதை அறியும் முறையை என் குருநாதன் அருளியது.


(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

1 comment:

  1. அகங்கனிந்த சிரம் தாழ்ந்த கரங்குவிந்த வணக்கங்களும், வாழ்த்துகளும், நன்றிகளும், நல்வாழ்த்துகளும் ஐயா. ஆழ்ந்த அமைதி சுத்தவெளி எனும் வெட்டாத சக்கரம் , பேசாத மந்திரம், வேறொருவர்க்கு
    எட்டாத புட்பம், இறையாத தீர்த்தம், இனி முடிந்து
    கட்டாத லிங்கம்,  கருதாத நெஞ்சம்,  கருத்தினுள்ளே
    முட்டாத பூசை .

    ReplyDelete