ஓவியம் : இணையம்
'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – பொங்குதல்
வார்த்தை : பொங்குதல்
பொருள்
- · காய்ந்து கொதித்தல்
- · கொந்தளித்தல்
- · மிகுதல்
- · பருத்தல்
- · மேற்கிளர்தல்
- · மகிழ்ச்சிகொள்ளுதல்
- · கோபித்தல்
- · செருக்குறுதல்
- · நுரைத்தெழுதல்
- · விளங்குதல்
- · மயிர் சிலிர்த்தல்
- · வீங்குதல்
- · விரைதல்
- · துள்ளுதல்
- · கண் சூடுகொள்ளுதல்
- · உயர்தல்
- · செழித்தல்
- · ஒலித்தல்
- · சமைத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
நேரல்லார்
நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித்
திருத்தல் தகுதிமற் -றோரும்
புகழ்மையாக்
கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக்
கொண்டு விடும்.
நாலடியார்
நற்குணமில்லாதவர்
பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்!
அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக்
கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும்
2.
கங்கயில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்கு
நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தன்னுள்
எங்கள்
மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம்
மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே
நாலாயிர
திவ்ய பிரபந்தம்
கங்கையை
விட புனிதமான காவிரிக்கு நடுவில் பொங்கி வரும் நீர் பரந்து விரிந்து அனைத்து இடங்களிலும்
பாயும் பூக்கள் நிறைந்த சோலைகளில் உள்ள திருவரங்கத்தில் எங்கள் திருமால் இறைவன் ஈசன்
படுத்து இருக்கும் கோலத்தைக் கண்ட பின் அந்தக் கோலத்தை எப்படி மறந்து வாழ்வேன் ஏழையேன்
ஏழையேனே
No comments:
Post a Comment