ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – கலாபம்
வார்த்தை : கலாபம்
பொருள்
·
பெண்கள் அணியும் இடையணி
·
ஆண் மயிலின் தோகை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
தேங்கிய அண்டத்து இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் *கலாபப்* புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளம் தனிவேல்
வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே.
கந்தர் அலங்காரம்
தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, தனது சிறிய திருவடிகளில் அழகான வீரக் கழலை அணிந்து கொண்ட முருகப்பெருமான், குதிரையையொத்த தோகையையுடைய மயிலின் மீது ஏறி நடந்ததும் சூரபன்மனின் சேனை முறிபட்டது; ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து ஏவிய உடனே குலமலைகள் எட்டும் விலகி வழிவிட்டன
No comments:
Post a Comment