ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – இறத்தல்
வார்த்தை : இறத்தல்
பொருள்
·
இறுதல்
·
கடத்தல்
·
கழிதல்
·
நெறிகடந்துசெல்லுதல்
·
சாதல்
·
மிகுதல்
·
வழக்குவீழ்தல்
·
நீங்குதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
தொடர்புடைய சொற்கள்
·
வீடுபேறு
·
முக்தி
·
திருவடி சார்பு
·
கைலாச பதவி
·
பரமபதம்
2.
பிறந்தன *இறக்கும்*, *இறந்தன* பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!
பட்டினத்தார்
No comments:
Post a Comment