Wednesday, January 18, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இருடி


ஓவியம் : இணையம்


'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  இருடி
வார்த்தைஇருடி
பொருள்

·         ரிஷி
·         முனிவன்
·         வேதம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
அகத்தியர் தனது பாடல்களில் தன்னை இருடி என்று குறிப்பிடுகிறார். முனிவர் என்ற பொருளிலும், வேதம் அறிந்தவர் என்ற பொருளிலும் குறிப்பிடுகிறார்.

2.
அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் ... உன்னை

திருப்புகழ் - அருணகிரிநாதர்
அணுகமுடியாத முனிவர், பிரமன், மால், தேவர், அடியார் போன்றவர்கள்

3.
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீ பெற
அகற் கப்பாலுங் காவல் என்றுந்தீ பற

திருவாசகம் - மாணிக்கவாசகர்

உலகத்து உயிர்களைக் கதிரவன் வெப்பம் தாக்கிவிடாமல் காவல் செய்பவர் என்பதால் கதிரோடு திரிதரும் அமரரும் முனிவரும் ஏகாசமிட்ட இருடிகள் னப்பட்டனர். இவ்வளவு பேருபகாரம் செய்கின்ற இவர்களுக்கும், சூரியமண்டலம் தாண்டி உள்ள பிறருக்கும் காவலாக உள்ளவன் சிவபெருமான் என்றறிக.

4.
முந்துரு இருவ ரோடு
மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவர்
இருடிகள் இன்பஞ் செய்ய
வந்திரு பதுகள் தோளால்
எடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார்
கடவூர்வீ ரட்ட னாரே.

தேவாரம் - திருநாவுக்கரசர்


ஐந்தொழிலைச் செய்யும் கருத்தாக்கள் ஆகிய அயன் , அரி எனும் இருவருடன் உருத்திரன் , மகேசன் , சதாசிவன் ஆகியவர்கள் கூடி அமையும் ஐவராகவும் தாம் ஒருவரே இருந்து கொண்டு, இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் தம்மை வழிபட்டு இன்பத்தை விளைக்கவும் , கயிலையை நெருங்கி வந்து அதனை இருபது தோள்களாலும் பெயர்த்த இராவணனுடைய வலிமையை அழித்து அவன் வாயினால் இசைப் பாடல்களைக் கேட்டு அருளினார் கடவூர் வீரட்டனார்

No comments:

Post a Comment