ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – முசிதல்
வார்த்தை
: முசிதல்
பொருள்
·
அறுதல்
·
கசங்குதல்
·
களைத்தல்
·
:மெலிதல்
·
அழிதல்
·
குன்றுதல்.
குறிப்பு
உதவி / இலக்கிய பயன்பாடு
படிக்கின்றிலை
பழநித் திருநாமம், படிப்பார் தாள்
முடிக்கின்றிலை,
முருகா என்கிலை, *முசியாமல்* இட்டு
மிடிக்கின்றிலை,
பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின்றிலை,
நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?
கந்தர் அலங்காரம்
- அருணகிரிநாதர்
மனமே!
பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி
ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்கின்றாயில்லை.
[பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை] 'முருகா' என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள்
பசியால் மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி அதனால்
நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும்பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை.
இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?
No comments:
Post a Comment