Wednesday, January 18, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாடு

ஓவியம் : இணையம்

வார்த்தைமாடு
பொருள்

•              எருது
•              பக்கம்
•              இடம்
•              ஏழனுருபு
•              செல்வம்
•              பொன்
•              சீதனம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
காளை, எருது என்பவை ஆண் மாடு. பசு என்பது பெண்மாடு.

2.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை  - 400

ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல.

3.
மாடு குறித்த பழமொழிகள்

1.             ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும்.
2.             மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
3.             மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்
4.             மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
5.             நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
6.             அடியாத மாடு படியாது.
7.             மாடு கிழமானாலும் பாலின் ருசி போகுமா?
8.             மாடு தின்கிற மாலவாடு, ஆடு தின்கிறது அரிதா?
9.             மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனிதனை சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.
10.          மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவதா?
11.          மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலமிட்ட பெண்சாதி
12.          மேய்க்கிற மாட்டின் கொம்பிலே புல்லைக் கட்ட வேணுமா?
13.          பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு, தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு.
14.          பசு உழுதாலும் பயிரைத் தின்ன வொட்டான்.
15.          பசுத்தோல் போர்த்திய புலி போல
16.          பசுமாடு நொண்டியானால், பாலும் நொண்டியா?
17.          பசுவைக் கொன்று செருப்பு தானம் செய்தது போல.
18.          பசுவுக்கு பிரசவ வேதனை , காளைக்கு காம வேதனை
19.          பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்
20.          மாடு திருப்பினவன் அர்ச்சுனன்
21.          மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?
22.          மாடு மறுத்தாலும் பால் கறக்கும், வாலில் கயிறைக் கட்டினால்.
23.          காளை போன வழியே கயிறு போகும்.
24.          இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்
25.          எருதுக்கு நோய்வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?
26.          எருது ஏழையானால் (கூடாவிட்டால்), பசு பத்தினித்துவம் கொண்டாடும்
27.          எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்
28.          பசு மாடும் எருமை மாடும் ஒன்றாகுமா?
29.          பசு கருப்பென்று பாலும் கருப்பா?

30.          மாட்டை மேய்த்தானாம், கோலைப் போட்டானாம்

No comments:

Post a Comment