ஓவியம் : இணையம்
'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – அடுதல்
வார்த்தை : அடுதல்
பொருள்
·
கொல்லுதல்
·
தீயிற்
பாகமாக்குதல்
·
சமைத்தல்
·
வருத்துதல்
·
போராடுதல்
·
வெல்லுதல்
·
காய்ச்சுதல்
·
குற்றுதல்
·
உருக்குதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
இடுதலைச்
சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால்
கெடுதலிலா
தொண்டரில் கூட்டியவா கிரௌஞ்ச வெற்பை
*அடுதலைச்*
சாத்தித்த வேலோன் பிறவியற இச்சிறை
விடுதலைப்பட்டது
விட்டது பாச வினை விலங்கே.
கந்தர்
அலங்காரம்
வறியவர்க்குத்
தருவதைச் சிறிதும் எண்ணாதவனும் (தர்மம் செய்யாதவனும்), உன்னை அறியும் ஞானம் இல்லாதவனுமாகிய
அடியேனை உனது அன்பால் தீமையற்றத் தொண்டர்களுடன் சேர்த்து அருளியவரே! கிரௌஞ்ச மலையை
அழித்து முடித்த வேலாயுதக் கடவுளின் அருளால், அடியேனின் பிறவித் துன்பம் அற்றுப் போய்
இந்த உடலாகிய சிறைவாசம் முடிவுற்று விடுதலையானேன்; பாசத்தாலும் வினையாலும் வந்த விலங்கும்
விட்டு ஒழிந்தது.
No comments:
Post a Comment