ஓவியம் : இணையம்
'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – துப்பன்
வார்த்தை : துப்பன்
பொருள்
·
வலிமையுள்ளவன்
·
ஒற்றன்
·
நுகர்வோன்
·
உணவாயுள்ளவன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
*துப்ப* னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
தேவாரம் - 1ம் திருமுறை - திருஞானசம்பந்தர்
உலகத்தில், இவ்வாழ்க்கையின் பயனாக அடையக் கூடிய சிற்றின்பத்தில் திளைக்காது, சமநிலையால் ஒப்ப நோக்கி, ஈசன் அருளைத் துணையாகக் கொண்டு வாழ வேண்டும். அத்தகைய தன்மையை ஒளியுடைய வெண்ணீறு அணிந்த பெருமான் ஒப்புவர். நெஞ்சமே ! ஈசன் விளங்கும் சோற்றுத்துறை சென்று அவன் தாள் மலரை வணங்கி நற்கதி அடைக.
No comments:
Post a Comment