ஓவியம் : இணையம்
'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – பைதல்
வார்த்தை : பைதல்
·
இளையது
·
சிறுவன்
·
குளிர்
·
துன்பம்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையின்
*பைதல்* ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே.
திருவாசகம் - மாணிக்கவாசகர்
சிவனே! நான் உன்னை அடைய இருப்பது எப்பொழுதோ? எனக்கு உன்னையன்றி வேறு புகலிடம் இல்லாமையால், என் துன்பத்தை நோக்கி இரங்கிக் காத்தருளல் வேண்டும். இவ்வாறு நீயே ஆட்கொண்டருளினாலன்றி,
நான் உன்னை அடையும் வகையில்லை.
2.
நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்
*பைதல்* வெண்பிறை பாம்புடன் வைப்பதே .
ஐந்தாம் திருமுறை - தேவாரம்
- திருநாவுக்கரசர்
நெய்தலும் ஆம்பலும் நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ளதும், மெய்யன்பினார் வலம் கொள்வதும் ஆகிய மறைக்காட்டுறையும் பெருமானே! பெண்ணொருபாகம் கொண்ட தேவரீர், கவர்த்த புன்சடையில் வருத்தமுற்ற பிறையை அதனை விழுங்கக் காத்திருக்கும் பாம்புடன் ஒருங்கு வைத்தருளியது என்னையோ?
No comments:
Post a Comment