ஓவியம் : இணையம்
அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சாய்தல்
வார்த்தை : சாய்தல்
பொருள்
·
மெலிதல்
·
கவிழ்தல்
·
வளைதல்
·
திரண்டுசெல்லுதல்
·
நடுநிலைமை
மாறுதல்
·
சார்தல்
·
நடந்தேறுதல்
·
ஒதுங்குதல்
·
கோள்
முதலியவை சாய்தல்
·
படுத்தல்
·
தோற்றோடுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. - 855
மனதில் மாறுபாடு வரும்போது அதை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.
2.
தடையோ மலையென் றெடுக்கும் தருக்குமிக
உடையான் அலற விரலொன் றூன்றியவா
புடையே பொழில்சூழ் பொலிவார் பூந்துருத்திச்
சடையா என்னச் சாயும் வல்வினையே.
தேவாரம் - திருஞானசம்பந்தர்
கர்வத்தினால்
செருக்கு மிகவும் கொண்டு கயிலை மலையை பெயர்த்து எடுத்த போது அவன் அலறுமாறு கால் விரலால்
ஊன்றியவனே, சோலைகள் சூழ்ந்த அழகிய பூந்துருத்தி தலத்தில் உறைபவனே, சடையனே என்று உன்னை
போற்றி வணங்கினால் எனது வல்வினைகள் அழியும்.
No comments:
Post a Comment