Monday, September 30, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள்-1

தமிழ் இரண்டாம் பாடம்

மதிப்பெண்கள் - 10*1 = 10

கடவுள் கொள்கை குறித்து கட்டுரை ஒன்று வரைக.

முன்னுரை : கடவுள் கொள்கை குறித்த சில விஷயங்கள் இங்கு குறிக்கப் படுகின்றன.

நிகழ்வு/கதை -  1
முடித் திருத்தும் நிலையம்.
முடி திருத்துபவர் - கடவுள் இல்லை என்பதே என்கருத்து.
வாடிக்கையாளர் - ஏன்?
முடி திருத்துபவர் - ஏன் இத்தனை விஷயங்களையும் பார்த்து சும்மா இருக்கார்.
வாடிக்கையாளர் - மௌனம்.
முடி திருத்துபவர் -  உங்கள் மௌனமே கடவும் இல்லை என்பதை நிருபிக்கிறது.
வாடிக்கையாளர் - நான் ஒன்று கேட்கட்டுமா?
முடி திருத்துபவர் - சரி.
வாடிக்கையாளர் - இந்த ஊரில் முடி திருத்துபவரே இல்லை என நினைக்கிறேன்.
முடி திருத்துபவர் - எப்படி அதான் நான் இருக்கிறேனே.
வாடிக்கையாளர் - அப்படி எனில் ஏன் பல பேர் அடர்ந்த முடியோடும், தாடியோடும் அலைகிறார்கள்.

நிகழ்வு/கதை -  2
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
பார்வையாளர் : கடவுள் இருக்கிறாரா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : இருக்கிறார்.
பார்வையாளர் : அப்படி எனில் நான் எப்படி பார்ப்பது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரி நீயார்?
பார்வையாளர் : நான் மருத்துவன்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரிவா, அறுவை சிகிச்சை செய்ய செல்லலாம்.
பார்வையாளர் : அது எப்படி முடியும். அதற்கு படிக்க வேண்டும், பயிற்சி வேண்டும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி வேண்டும் எனில், கடவுளை காணவும் பயிற்சி வேண்டும்.

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Wednesday, September 11, 2013

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

ஆன்மீகம் - முன்பெல்லாம் பெரும்பாலான சிலைகள் குளம் சார்ந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு களிமண்ணால் செய்யப்பட்டன. வேதிப் பொருள்களால் செய்யப்பட்டவை அல்ல.  ப்ரம்மத்திலிந்து தோன்றியவை மீண்டும் ப்ரம்மத்தில் என்பதே அடிப்படை.

அறிவியல் :
1. வினாயகர் சிலையுடன் சேர்த்து பூக்கள் மற்ற பொருள்களையும் குளத்தில் இடுவார்கள். அவைகள் மீன்களுக்கு உணவாகும். மீன்கள் இனப் பெருக்க காலம் மற்றும் வளர்ச்சி அடையும் காலம் இம் மாதம். எனவே பொருள்கள் குளத்தில் இடப்படும்.

2. மீண்டும் குளத்தில் அவை சேர்க்கப்படுவதால் மண் அரிப்பு தடுக்கப்படும்.

மற்றவை :
1. அந்த அந்த பகுதி மக்கள் சிறு வியாபாரம் செய்து பலன் அடைவார்கள்.
2. பால கங்காதர திலகர் சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக இவ் விழாவினை சிறப்பாக கொண்டாடத் துவங்கினார்.

Friday, September 6, 2013

குடிப் பிறப்பு

நான்மணிக்கடிகை  - நான்கு விஷயங்களை சொல்லும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மிக நுட்பமானப் பொருளைத் தரும். நான்கு வித மலர்கள் ஒரு மாலை போல்.


கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்;   மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள் பல் விலைய முத்தும் பிறக்கும்;
அறிவார் யார், நல் ஆள் பிறக்கும் குடி?

பொருள் அனைவரும் அறிந்ததே.

கள்ளி போனற செடியில் வாசனை மிகுந்த அகில் பிறக்கும். வாசனை திரவியங்கள் மானின் வயிற்றில் இருந்து பிறக்கும். விலை உயர்ந்த முத்துக்கள் கடலில் இருந்து கிடைக்கும்.நல்ல மனிதர்களின் குடிப் பிறப்பினை எவர் அறியக் கூடும்.

எனவே மனித வாழ்வே மகத்துவம், குடிப் பிறப்பு அன்று.