Wednesday, November 26, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 12/25 திரிமூர்த்தி



வடிவம்

·    உலகை  படைக்க எடுக்கப்பட்ட வடிவம் ஏகபாதராகத் திருவடிவம்.
·    இதயத்தில் இருந்து ஆயிரத்தில் ஒரு கூறாக ருத்திர், பின் வலப் பாகத்தில் இருந்து பிரம்மன், இடப் பாகத்தில் இருந்து விஷ்ணு.
·    சில இடங்களில் ஏகபாத மூர்த்தியும், திரிமூர்த்தியும் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏகபாத மூர்த்தி என்பது சிவன் மட்டும் தனித்து ஒரு காலில் காணப்படும் வடிவம். (யோக நிலையைக் குறிப்பது) திரிமூர்த்தி என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒன்றாக ஒற்றைக்காலில் தனித்து காணப்படும் வடிவம்.
·     இம்மூர்த்திக்கான ஸ்தாபன முறைகளும், பிரதிஷ்டா முறைகளும் மிகக் கடினமாக இருக்கின்றன.
·    வர்ணம் - ரக்தவர்ணம்
·    முகம் - முக்கண்
·    கரங்கள் - வரத அபய ஹஸ்தம் மான் மழு
·    அலங்காரம் - ஜடாமகுடம்
·    பாதம் - ஒன்று
·    இடுப்புபிரதேசத்திற்கு மேல் தெற்கு வடக்கு பக்கமாகிய இருஇடங்களிலும் முறையாக பாதிசரீரம் உடைய பிரம்மா விஷ்ணு
·    பிரம்மா விஷ்ணு ஒவ்வொருபாதத்துடன் கூடியதாக() அஞ்சலிஹஸ்தத்துடன்
பிரம்ம விஷ்ணுக்களின் அளவானது பெண் சரீரம் போல் சற்று வளைவாக, இரண்டு கைகளும் தொழுத நிலையில் ஒரு காலோடு கூடியவராக.  (கால் இல்லாமலும்)

வேறு பெயர்கள்

ஏகபாததிரிமூர்த்தி
ஏகபாத திரிமூர்த்தி

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·   திருமறைக்காடு (வேதாரண் யம்)
·   பிச்சாண்டார் கோயில்(அ) உத்தமர் கோயில், திருச்சி
·   மண்டகப் பட்டு ஸ்ரீ திரிமூர்த்தி குகைக் கோவில்
·   தர்மராஜரதம்(அ)திரிமூர்த்தி குகை, மஹாபலிபுரம்
·   தப்பளாம்புலியூர், திருவாரூர்
·   திரு உத்தரகோசமங்கை
·   திருவக்கரை
·   ஆனைமலையடிவாரம்
·   ஒரிஸ்ஸா, சௌராஷ்டிரம், மைசூர்
·   திரியம்பகேஸ்வர்,நாசிக்
·   திருநாவாய்,திரூர் நகரிலிருந்து தெற்கே 12 கி.மீ., மலப்புறம் மாவட்டம்,கேரள மாநிலம்
·   திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில் -  திரிப்பிரயார் ஆற்றின் கரை,கொடுங்கல்லூர்


இதரக் குறிப்புகள்

·  சிவபேதம் பத்தையும் கேட்டவர்களில் திரிமூர்த்தி வடிவம் பற்றி கேட்டவர் உதாசனர்
·  அஷ்ட வித்யேச்வரர்களில் (வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி) திரிமூர்த்தியும் ஒருவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.
·  நவராத்திரியின் போது இரண்டாம் நாளளில்  மூன்று வயதுள்ள பெண்ணை திரிமூர்த்தி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இப்பூஜை அறம், பொருள், இன்பம், தானியம் ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என பரம்பரையும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்
·  உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் த்ரீமூர்த்தி ஸ்தாபன விதி -  அறுபத்தி ஒன்றாவது படலம்.

புகைப்படம் : வலைத்தளம்


Tuesday, November 18, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 11/25 சக்ரவரதர்



சக்ரவரதர்

சிவனின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்சக்ரவரதர்.

திருமாலுக்கு சக்கரம் கொடுத்த மூர்த்தி. இவரை வழிபடுபவர்கள் அனைத்து போகங்களையும் எவ்வித இடையூரும் இன்றி துய்ப்பார்கள்.


இந்த விபரம் மட்டுமே இம்மூர்த்தி பற்றி காணப்படுகிறது.

Wednesday, November 12, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம்



  பஞ்சபூத தலங்களில் – பிருத்வி - நிலம்
  மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் கிடையது
  இறைவி கம்பை மாநதியில் நீர் பெருக்கெடுத்து வந்ததால் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டதால் தழுவக் குழைந்தநாதர்
  சிவன் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் அணிந்திருக்கிறார்
  பிரகாரத்தில் பிரம்மா பூசித்த இலிங்கம் - வெள்ளக்கம்பம், விஷ்ணு பூசித்த இலிங்கம் - கள்ளக் கம்பம், உருத்திரர் பூசித்த இலிங்கம் -  கள்ளக் கம்பம்
  108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி, இத் திருக்கோயில் உள் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது.
  இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை கொடுத்தருளிய தலம்.
  திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம்
  சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்
  தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி
  ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்கள் பிரகாரத்தில்
  கச்சியப்ப சிவாச்சாரியார்  "கந்த புராணத்தை' இயற்றிய தலம்.
  கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னால் உள்ளது.
  172 அடி உயரமுள்ள இராஜகோபுரம்

இத்தலத்தைப்பற்றிய நூல்கள்

·திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் - காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர்  - காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர் - கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூது,
·இரட்டையர்கள் -  ஏகாம்பர நாதர் உலா
·பட்டினத்துப்பிள்ளையார் - திருவேகம்ப முடையார் திருவந்தாதி,
·மாதவச்சிவஞான யோகிகள் - ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர், ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி

சிறப்பு செய்யும் நூல்கள்
மணிமேகலை,  
தக்கயாகப் பரணி
மத்தவிலாசப்பிரகசனம் 
தண்டியலங்காரம்
பன்னிரு திருமுறைகள்


தலம்
ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம்
பிற பெயர்கள்
திருக்கச்சியேகம்பம்
இறைவன்
ஏகாம்பரநாதர், தழுவக் குழைந்தநாதர், ஏகாம்பரேஸ்வரர், திருவேகம்பர்
இறைவி
ஏலவார்குழலி
தல விருட்சம்
மாமரம்
தீர்த்தம்
சிவகங்கை தீர்த்தம், கம்பாநதி
விழாக்கள்
பங்குனி உத்திரம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.
+91- 44-2722 2084.
வழிபட்டவர்கள்
உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் - 4 பதிகங்கள், திருநாவுக்கரசர் - 7 பதிகங்கள்,  ,  சுந்தரர் - 1 பதிகங்கள், மாணிக்கவாசர் *
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 233 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   1 வது தலம்.

*சில நூல்களிலும் வலைத்தளங்களிலும் மாணிக்கவாசகர் பாடியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணிக்க வாசகரின் பாடல் வரிகளில் இத்தலம் பற்றிய குறிப்பு உள்ளதே தவிர தனி பாடல் இல்லை.


ஏலவார் குழலம்மை உடனாகிய  ஏகாம்பரேஸ்வரர் 



பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    2 ம் திருமுறை 
பதிக எண்                   12
திருமுறை எண்              8

பாடல்

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.

பொருள்

தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.


கருத்து

சர்வஞ்ஞத்வம் குற்றம் அற்றவனும், அனைத்தையும் இயக்கும் வல்லமை உடையவன் என்ற சைவசித்தாந்த கருத்து சிந்திக்கக்கூடியது.

ரென்றலை மேலாரே - என்னால் வணங்கப்படுவர்கள் எனும் பொருளில்



பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    61
திருமுறை எண்               1

பாடல்

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

பொருள்

பாற்கடல் கடையும் பொழுது அதில் வந்த நஞ்சினை விரும்பி உண்டவனும் அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனும், எல்லோருக்கும் முதல்வனாக இருப்பவனும், தேவர்களால் துதிக்கப்படும் பெருமை உடையவனும், நினைப்பவர்கள் நினைவில் உள்ளவனும், நீண்ட கூந்தலை உடைய உமையால் தினமும் துதிக்கப்படுபவனும், காலங்களுக்கு முடிவானவனாகவும் ஆகிய எம்மானை காண அடியேன் கண் பெற்றவாறே.

கருத்து

'வியப்பு' என்பது சொல்லெச்சம்
'சீலம்' என்பது  குணம்

புகைப்படம் : தினமலர்

Wednesday, November 5, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 10/25 அர்த்தநாரீஸ்வரர்



வடிவம்

சிவனின் உருவத் திருமேனி
சிவனும் சக்தியும் இணைந்த வடிவம்
வலது புறம் - சிவன்
இடது புறம்பார்வதி



வலது புறம் - சிவன்
இடது புறம்பார்வதி
தலை

கரண்ட மகுடம்
நெற்றி

அரைத்திலகம்
கைகள்
அபயமும், பரசும் அல்லது
வரதமும், சூலமும் அல்லது
மழுவும், அபயமும் அல்லது
சூலமும் அக்கமாலையும் அல்லது
ஒரு கை இடபத்தின் தலையின் மீது ஊன்றியவாறும், மற்றொன்று அபயம் தாங்கியவாறு
இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் சிவனின் பாகத்தில் வரதம் அல்லது கபாலம்
சிவன் வலது புறம் மூன்று கரங்கள் பெற்றிருந்தால் இடது புறம் தேவி ஒரு கரம் மட்டும்கண்ணாடி, கிளி, நீலோத்பலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
கரங்களில் கேயூரம், கங்கனம்.

அர்த்தநாரீஸ்வரர் படிமம் இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் இடது கை தொங்கவிட்டவாறு  அல்லது இடபத்தின் மீது தொட்டவாறு இருக்கும்.  

மேலாடை
புலித்தோலாடை
இரத்தினங்களினாலான ஆபரணங்கள் 

நாகயக்ஞோபவீதம், நாகத்தினாலான சர்ப்பமேகலை

கோலம்
சற்று வளைந்து தேவியின் உயரத்திற்கேற்ப பத்மாசனத்தில் நின்றவாறு இருக்கும்
பத்மாசனத்தில் நின்ற கோலம்
தோற்றம்
கோரம்
சாந்தமான தோற்றம்
வண்ணம்
சிவப்பு வண்ண மேனி
கிளிப்பச்சை அல்லது அடர்ந்த நிறம்



இதரக் குறிப்புகள்

வடமொழியில் அர்த்தநாரீஸ்வர துதி என்று ஒன்று உள்ளது.
விளக்க நூல்கள் - அம்சுமத் பேதாகமம், காமிக்காகமம், சுப்ரபேதாகமம், சில்பரத்னம், காரணாகமம்

புகைப்படம் : வலைத்தளம்