Wednesday, August 20, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருவெண்பாக்கம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருவெண்பாக்கம்

·   கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தி
·   சுந்தரருக்கு ஊன்றுகோல் ஈந்ததால் ஊன்றீஸ்வரர்
·   கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்த காட்சி
·   சுந்தரரின் கண்பார்வைக்கு ஊழ்வினையே என்று கூறி மின்னல் கீற்று போல் ஒளி காட்டியவள் - மின்னொளி அம்பாள்

·   பைரவர் எட்டு கைகளுடன்








தலம்
திருவெண்பாக்கம் (பூண்டி)
பிற பெயர்கள்
பழம்பதி, திருவெண்பாக்கம்
இறைவன்
ஊன்றீஸ்வரர். ஆதாரதாண்டேசுவரர் ,சோமாஸ்கந்தர்
இறைவி
மின்னொளி அம்பாள், கடிவாய்மொழியம்மை, . தடித் கௌரி அம்பாள்
தல விருட்சம்
இலந்தை
தீர்த்தம்
குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்
விழாக்கள்
சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்,
பூண்டி - 602 023,  
+91- 44 - 2763 9725, 2763 9895. - 9245886900
பாடியவர்கள்
சுந்தரர்,
நிர்வாகம்
இருப்பிடம்
திருவள்ளூரில் இருந்து - 12 கி.மி.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   17 வது தலம்.

ஊன்றீஸ்வரர்



மின்னொளி அம்பாள்




பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    089
திருமுறை எண்               1

பாடல்

பிழையுளன பொறுத்திடுவர்
    என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
    படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
    கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்
    துளோம்போகீர் என்றானே

பொருள்

குழை என்ற காதணிகலன்களை அணிந்த உடையவனே, உலகியல் வழக்கால் பிழைகள் எனப்படுகின்றவைகளை பிழை என்று எண்ணாமல் நம் பிழைகளை பெருமானார் பொருத்துக் கொள்வார் என்று எண்ணி நான் அவைகளை செய்தேன். அவ்வாறு இல்லாமல் பிழைகளை நீ பொறாததால் உனக்கு உண்டாகும் பழியை பற்றி கவலைப்படாமல் என் கண்களை மறைத்து விட்டாய். பார்வை இல்லாததால் 'இக்கோயிலில் இருக்கிறாயா' என்று வினவ, மானை கரங்களில் ஏந்தியவன் 'உள்ளோம், போகீர்'  என்றானே. இது தானே அவனது கருணை.


கருத்து
திருவாரூர் வாழ்ந்து போதீரே – வடிவம்
படலம் -  கண்ணில் படர்ந்து ஒளியை மறைப்பதொன்று
மறைப் பித்தாய் - மறைவித்தாய்
உளாயே - வினா ஏகாரம்
போகீர் ` என்றது இறைவர் அருளிச்செய்த சொல்லை அவ்வாறே சுந்தரர் கூறியது.


பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    089
திருமுறை எண்               10

பாடல்

மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே


பொருள்
மான் போன்ற கழுத்தினை உடைய சங்கிலியை எனக்கு தந்து, அதனால் விளையும் பயன்களை நான் புரிந்து கொள்ளுமாறு அருள் செய்தாய். உலகத்தை ஈன்றவனே, நீ இங்கி இருக்கிறாயா என்று நான் வினவ, ஊன்றுவதற்கு ஒரு கோலை அருளி, 'உள்ளோம், போகீர்'  என்றானே. இது தானே அவனது கருணை.


கருத்து

அருள் செய்தளித்தாய் - அருளுதல் + செய்தல்+ அளித்தல், மற்றொரு பொருளில் அருளிச் செய்தல்+அளித்தல்,
வருபயன்கள் - கன்மானுபவம்

புகைப்படம் - இணைய தளங்கள்


No comments:

Post a Comment