மகேசுவரமூர்த்தங்கள்
20/25 சரபமூர்த்தி
வடிவம்(பொது)
· நரசிம்ம மூர்த்தியாக
அவதாரம் எடுத்த திருமாலின் கோபம் இரண்ய சம்ஹாரத்திற்குப்
பிறகும் குறையவில்லை. அதன் பொருட்டு சிவபெருமான்
எடுத்த அவதாரம் `சரபமூர்த்தி'
· சரபம் என்பது
மனிதன், யாளி, பட்சி, இம்மூன்றும் கலந்த உருவம். .
· உடல் அமைப்பு
- சிம்ம முகம், சிம்ம உடல், எட்டுக்கால், எட்டுக்கை,
ஆயுதமாக மான், மழு, சூலினி, ப்ரத்யங்கிரா தேவியர்
– இறக்கைகள், சூரியன், சந்திரன், அக்னி - கண்கள்,துடிக்கும்
நாக்கு, தூக்கிய காதுகள், கருடமூக்கு, நான்கு
கரங்கள், எட்டு கால்கள், அதில் காந்தசக்தி கொண்ட நகங்கள்
· உத்திர காமிகாகமத்தின்படி
இவ்வடிவம் ஆகாச பைரவர்
· சில இடங்களில் 32 கைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்.
· சில இடங்களில்
இம் மூர்த்தம் மகேசுவர பேதமாக குறிப்பிடப்படுகிறது.
வேறு
பெயர்கள்
·
ஸ்ரீ சரபேஸ்வரர்
·
ஸ்ரீ சரப மூர்த்தி
·
புள்ளுருவன்
·
எண்காற் புள்ளுருவன்
·
சிம்புள்
·
நடுக்கந்தீர்த்த பெருமான்
·
சிம்ஹாரி
·
நரசிம்ம சம்ஹாரர்
·
ஸிம்ஹக்னர்
·
சாலுவேசர்
வடிவம்
அமையப் பெற்ற திருக்கோயில்கள்
·
திருபுவனம், மயிலாடுதுறை
·
தாராசுரம், கும்பகோணம்
·
ஆபத்சகாயேசுவரர் கோயில்,துக்காச்சி,கும்பகோணம்
·
தேனுபுரீஸ்வரர் ஆலயம்,மாடம்பாக்கம், சென்னை
·
ஆலய மூலவர் - ஸ்தம்ப சரபேஸ்வரர்,திரிசூலம், சென்னை
·
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம்,மயிலாப்பூர்
·
குறுங்காலீஸ்வரர் கோயில்,கோயம்பேடு
·
தாமல் நகர், காஞ்சிபுரம் - லிங்க
உருவ சரபேஸ்வரர்
·
மதுரை, சிதம்பரம், காரைக்குடி –
·
சராவு சரபேஸ்வரர் ஆலயம், மங்களூர்
இதரக்
குறிப்புகள்
·
16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர்
என்பவரால் இயற்றப்பட்ட சரப புராணம்
புகைப்படம் : இணையம்
புகைப்படம் : இணையம்
No comments:
Post a Comment