சாங்கியம் - சிறு விளக்கம்
· தேகாதி பிரபஞ்சத்திற்கு காரணமானதும், அருவமாகவும், என்றும் உள்ளதாகவும், எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்தும் ஜடமாகவும் உடைய மாயை உண்டு என உணர்தல்.
· அதனோடு தொடர்புடைய ஆன்மா உண்டு என்றும் அறிதல்.
· ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தால் சுக துக்ககங்கள் உண்டு என்றும், அதை பிரித்து உணரும் பகுத்தறிவதாலே அஞ்ஞானம் நீங்கி ஆன்மா முக்தி அடையும் என்றும் உணர்தல்.
· பல பிறவிகளுக்குப் பின் முக்தி உண்டு என உணர்தல்,
· ஈஸ்வரனை தத்துவ விசாரணை மூலமாக அறிய இயலா நிலையில் ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை என்று கூறுவது.
பாதஞ்சலம் - சிறு விளக்கம்
சாங்கிய கருத்துக்களை ஏற்பது. அதோடு மட்டுமல்லாமல் அதற்கு மேல் படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்யவும், உண்மை ஞானத்தை உபதேசிப்பவனாகவும் உடைய ஈஸ்வரன் ஒருவன் உண்டு எனவும், அவனை யோக முறையினால் காண இயலும் என்றும் விளக்குவது.
நியாயம்
- சிறு விளக்கம்
தர்கத்தின் வாயிலாக ஜடப் பொருள்களையும் சித்துப் பொருள்களையும் தனித்தனியே நித்தியப் பொருள்களாக அறிதல். ஜடத்தில் இருந்து சித்தினை பிரித்து அறிந்து முக்தி என்றும் கூறுதல் . சித்து மனம் என்றும் அது அணுவினை விட சிறியது என்றும் கூறும்.
No comments:
Post a Comment