தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருக்கள்ளில்
· சிவன் - சுயம்பு மூர்த்தி,
சதுர ஆவுடையார்
· சிவன் சக்தி தெட்சணாமூர்த்தியாக
· இடது கையினில் அமுத கலசம்,
ஏடு தாங்கி அம்பாளை தழுவிய கோலம்
· பிருகு முனிவர் இக்காட்சியினை
வணங்கியபடி கோலம்
· அகத்தியருக்கு திருமண காட்சிக்
கோலம் காட்டிய இடத்தில் ஒன்று
· அகத்தியர் பூஜித்த லிங்கம்
· திருஞானசம்மந்தருக்கு பூண்டி
தலத்தில் பூஜை பொருள்களை மறையச் செய்து இத்தலத்தில் பூஜைப் பொருள்கள் காட்சி.
· கஜபிருஷ்ட விமானம்
தலம்
|
திருக்கள்ளில்
|
பிற பெயர்கள்
|
திருக்கண்டலம், திருக்கள்ளம்
|
இறைவன்
|
சிவாநந்தீஸ்வரர், சோமாஸ்கந்தர்,
திருக்கள்ளீஸ்வரர்
|
இறைவி
|
ஆனந்தவல்லி
|
தல விருட்சம்
|
கள்ளில், அலரி
|
தீர்த்தம்
|
நந்தி தீர்த்தம்
|
விழாக்கள்
|
திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி
வரை
மாலை 5 மணி முதல் இரவு 8
மணி வரை
அருள்மிகு சிவாநந்தீஸ்வரர்
திருக்கோயில், திருக்கண்டலம்- 601 103.
ஊத்துக்கோட்டை தாலுகா,
திருவள்ளூர் மாவட்டம்.
+91-44 - 2762 9144.
+91- 99412 22814
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர்
|
நிர்வாகம்
|
|
இருப்பிடம்
|
சென்னை - பெரியபாளையம் சாலையில்
(36 கி.மீ.,) கன்னிகைப்பேர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 4 கி.மீ., சென்று இத்தலத்தை
அடையலாம்.
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 251 வது
தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 18 வது தலம்.
|
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1ம் திருமுறை
பதிக எண் 119
திருமுறை
எண் 3
பாடல்
ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லா னுறை பதியால்
காடலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.
பொருள்
ஆடல் பாடல்களில்
வல்லவனும், பாம்புகளை அணிகலன்களாக அணிந்தவனும், உண்ணுவதற்கு தலை ஓடு அன்றி வேறு எதுவும்
இல்லாடவனும், சுடுகாட்டினைத்
தவிர வேறு இடத்தை தனது இடமாக கொள்ளாதவனும் ஆகிய சிவன், பெரியோர்கள் அவன் பெருமை வாய்ந்த
புகழைப்பாட கள்ளில் எனும் தளத்தில் உறைகிறான்.
கருத்து
ஆடலான் பாடலா
னரவங்கள் பூண்டான் - நடராஜ வடிவம்.
ஓடலாற் கலனில்லா
னுறை பதியால் - பைரவ வடிவம்
அரவம் -
பாம்பு.
கலன் - உண்கலன்.
பாடு - பெருமை.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1ம் திருமுறை
பதிக எண் 119
திருமுறை
எண் 9
பாடல்
வரியாய மலரானும்
வையந் தன்னை
உரிதாய வளந்தானு
முள்ளு தற்கங்
கரியானு
மரிதாய கள்ளின் மேயான்
பெரியானென்றறிவார்கள்
பேசு வாரே.
பொருள்
சிவந்த வரிகளை
உடைய தாமரை மலரை இருப்பிடமாக கொண்ட பிரமனும், உலங்களை தனக்கு உரித்தானக்க அதை அளந்த
பிரானாகிய திருமாலும், நினைப்பதற்கு அரியவனாகி இருக்கும் பெருமானாகிய இறைவன், கள்ளில்
என்ற தலத்தில் உறைகிறான்.அவனை அறிந்தவர்கள் அவனை பெரியோன் என்று புகழ்வார்கள்.
கருத்து
வரி - செவ்வரி.
அவனை அறிந்தவர்கள்
அவனை பெரியோன் என்று புகழ்வார்கள். - அவனை அறியாதவர்கள் பேச மாட்டார்கள் என்பது குறிப்பு.
புகைப்படம் : தினமலர் மற்றும் வலைத்தலங்கள்
புகைப்படம் : தினமலர் மற்றும் வலைத்தலங்கள்
No comments:
Post a Comment