தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருக்கச்சிமேற்றளி
•
அமைவிடம் - பிள்ளையார் பாளையம்
• ஈசன் சுயம்பு மூர்த்தி
• இரு மூலவர் சன்னதிகள்
• சிவ சாரூப நிலை வேண்டி திருமால் இறைவனை நோக்கி தவமிருந்த தலம்
• ஞான சம்மந்தரில் பதிகம் கேட்டு சிவபெருமான் உருகியதால் ஓத உருகீசர்
• கற்றளி -
கற்களால் கட்டப்பட்ட கோயில். மேற்றளி - மேற்கு திசையில் அமையப்பெற்ற கோயில்
• ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு திருமால் உருகியதால் ஓத உருகீசர் - கர்ப்பக்கிருகத்துள் தனி சந்நிதி
தலம்
|
திருமேற்றளீஸ்வரர்
|
பிற பெயர்கள்
|
திருக்கச்சிமேற்றளி, கற்றளி
|
இறைவன்
|
திருமேற்றளிநாதர்
|
இறைவி
|
திருமேற்றளிநாயகி
|
தல விருட்சம்
|
வில்வம்
|
தீர்த்தம்
|
விஷ்ணு தீர்த்தம்
|
விழாக்கள்
|
சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 12.00
மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9
மணி வரை
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர்
திருக்கோயில்,
பிள்ளையார்பாளையம்-631
501
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் மாவட்டம். 09865355572, 09994585006
|
வழிபட்டவர்கள்
|
நூறு ருத்திரர்கள், சீகண்டர்,
வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேர் மற்றும் புதன்
|
பாடியவர்கள்
|
திருநாவுக்கரசர் - பதிகங்கள்,
, சுந்தரர் - பதிகங்கள், திருஞானசம்பந்தர்
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
இருப்பிடம்
|
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்
இருந்து 1கி.மீ
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 234 வது
தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 2 வது தலம்.
|
*
ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் கிடைக்கவில்லை
திருமேற்றளீஸ்வரர்
பாடியவர் திருநாவுக்கரசு சுவாமிகள்
திருமுறை 4ம் திருமுறை
பதிக எண் 43
திருமுறை
எண் 10
பாடல்
தென்னவன்
மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன்
விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின்
கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற்
கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.
பொருள்
தெற்குப்
பகுதியை ஆண்ட இராவணன், (தனது கர்வத்தால்) கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க, அதனால்
பார்வதி நடுக்கமுற, பார்வதியின் நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால்
கயிலாய மலையை அழுத்த, அதனால அவன் தலைகள் நெரிய, தன் தவறை உணர்ந்து கரும்பு போன்று இனிய
கீதங்களைப் பாட அதனால் அவனுக்கு அருள் செய்தவர். அவர் இந்த காஞ்சித் திருத் தலத்தில்
உறையும் மேற்றளியார் ஆவார்.
கருத்து
தென்னவன் - இராவணன் ,
சேயிழை - செய்ய ( கல் ) இழை ( த்துச் செய்யப்பட்ட அணிகளைப் ) பூண்டவள் . இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
மன்னவன் - என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன் என்றும் கொள்ளலாம்)
நெரிய - நொறுங்க
கன்னலின் - கரும்பினைப் போலும் இனிமை பயக்கும் ,
தென்னவன் - இராவணன் ,
சேயிழை - செய்ய ( கல் ) இழை ( த்துச் செய்யப்பட்ட அணிகளைப் ) பூண்டவள் . இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
மன்னவன் - என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன் என்றும் கொள்ளலாம்)
நெரிய - நொறுங்க
கன்னலின் - கரும்பினைப் போலும் இனிமை பயக்கும் ,
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7 ம் திருமுறை
பதிக எண் 021
திருமுறை
எண் 9
பாடல்
நிலையா நின்னடியே
நினைந் தேன்நி னைதலுமே
தலைவா நின்னினையப்
பணித் தாய்ச லமொழிந்தேன்
சிலையார்
மாமதில்சூழ் திருமேற்ற ளிஉறையும்
மலையே உன்னையல்லால்
மகிழ்ந்தேத்த மாட்டேனே.
பொருள்
பெரிய மதில்கள்
சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் உறையும் மலை போன்றவனே, அடியேன் உனது திருவடிகளையே நிலையான பொருளாக உணர்ந்தேன்.
அவ்வாறு உணர்ந்த பிறகு அதில் இருந்து என்றும் மாறாமல் தொடந்து இருக்க திருவருள் செய்தாய்.
அதனால் எனது துன்பங்கள் ஒழிந்தவன் ஆனேன். ஆகவே அடியேன், உன்னை விடுத்து பிற தெய்வங்களை
மனம் மகிழ்ந்து புகழ மாட்டேன்.
கருத்து
நிலையா நின்னடியே
- (திருமாலாலும்) அடைய முடியா திருவடி (இது என் கருத்து)
சலமொழிந்தேன்
- கடலைப் போன்ற பல பிறவி நீங்கினேன். (சலதி கிழிந்து - கந்தர் அலங்காரம்)
புகைப்படம் : கோலாலகிருஷ்ணன் விஜயகுமார்
இதுவரை இக்கோயிலுக்குச் செல்லவில்லை. தங்கள் பதிவின்மூலமாக செல்லும் ஆர்வம் வந்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன்.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி. 'வேண்டும் பரிசு உன்டெனில் அதும் உந்தன் விருப்பமன்றே' என்பதை அவன் அறிவான்.
ReplyDelete