'சைவத்தின்
மேற் சமயம் வேறில்லை' என்ற மொழித் தொடரை வைத்து சைவத்தின் பெருமையையும் அதற்கு காரணமாக
இருக்கும் அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமான் ஈசனின் பெருமைகளையும்
அறியலாம்.
அறியவொண்ணா
பெருமைகள் உடையது சிவனின் பெயர்கள். அப்படிப்பட்ட சிவனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள்
சந்தானக் குரவர்கள். சிவனின் பெருமைகளை பாடல்களாக அருளியவர்கள்.சைவ சித்தாந்த சாத்திரங்கள் இவர்களால் அருளப் பெற்றதே.
மெய்கண்டார்,
மறைஞான சம்பந்தர்,
அருணந்தி சிவாசாரியார்,
உமாபதி சிவம்
இவர்கள் குரு சீடர் மரபு கொண்டவர்கள். திரு மடங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மூலம் சைவ நெறி தழைக்க பங்களித்தவர்கள்.
இவர்களது காலம் 12, 13ம் நூற்றாண்டு.
இவர்களது பெயர்களும் இவர் இயற்றிய நூல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
· மெய்கண்டார் - சிவஞான போதம்
· அருள்நந்தி சிவாசாரியார் - சிவஞான சித்தியார், இருபா இருபது
· கடந்தை மறைஞான சம்பந்தர் - சதமணிக் கோவைசதமணிக்கோவை
· உமாபதி சிவாச்சாரியார் - சிவப்பிரகாசம், திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம்
இவர்களைப்பற்றி விரிவாக எழுத உள்ளேன். திருவருள் துணை புரியட்டும்.
இவர்களைப்பற்றி விரிவாக எழுத உள்ளேன். திருவருள் துணை புரியட்டும்.
No comments:
Post a Comment