Thursday, January 1, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 14/25 தட்சிணாமூர்த்தி



பல இடங்களில் கோஷ்டத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியும், நவகிரக சன்னதிகளில் இருக்கும் குரு பகவானும் ஒன்றாகவே கருதப்படுகிறது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இரண்டும் வேறு வேறானவை.

வடிவம்(பொது)

·         தட்சிணம் என்றால் தெற்கு, த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் சேர்ந்து தட்சிணா மூர்த்தி
·         பஞ்சகுண சிவமூர்த்திகளில் சாந்த மூர்த்தி
·         பிரம்மாவின் குமார்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகியவர்களுக்கு குரு
·         நான்கு கைகள்
·         இருப்பிடம் - ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி
·         திருமேனி - பளிங்கு போன்ற வெண்ணிறம் - தூய்மை
·         வலதுகால்  கீழ் - 'அபஸ்மரா' (அறியாமையை / இருளை )என்ற அரக்கனை(முயலகன்) மிதித்த நிலையில் - அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை
·         ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலை(36 அல்லது 96 தத்துவங்கள்) / ஒரு பாம்பு
·         அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பு
·         கீழ் இடது கையில் தர்பைப் புல் / ஓலைச்சுவடி(சிவஞான போதம்) / அமிர்தகலசம் -  அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்
·         கீழ் வலது கையில் ஞான முத்திரை(மும்மலங்களை விலக்கி இறைவன் திருவடி அடைதல்)
·         ஆடை - புலித்தோல் - தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்
·         தாமரை மலர்மீது அமர்ந்த கோலம் - இதயதாமரையில் வீற்றிருத்தல்(ஓங்காரம்)
·         நெற்றிக்கண் -  காமனை எரித்தல்; புலனடக்கம் உடையராதல் - துறவின் சிறப்பு
·         ஆலமரமும் அதன் நிழலும் - மாயையும் அதன் காரியமாகிய உலகம்
·         அணிந்துள்ள பாம்பு - குண்டலினி சக்தி
·         வெள்விடை - தருமம்
·         சூழ்ந்துள்ள விலங்குகள் - பசுபதித்தன்மை
·         த்யான ரூபம்
·         ஆசனம் - மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம்

வேறு பெயர்கள்

தெக்கினான்
ஆலமர் செல்வன்
தெற்கு நோக்கி இருப்பதால் தென் திசைக் கடவுள்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         புளியறை,செங்கோட்டை வட்டம்,    திருநெல்வேலி மாவட்டம்
·         பட்டமங்கலம் - சிவகங்கை மாவட்டம்
·         ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்
·         சிவதட்சிணாமூர்த்தி - காசி விஸ்வநாதர் கோயில்,மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட்
·         திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் -  சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலம்
·         ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கிய கோலம் - திருகன்னீஸ்வரர் கோயில்,திருக்கண்டலம்,சென்னை ரெட்ஹில்ஸ் - பெரியபாளையம் சாலை
·         பள்ளிகொண்டீஸ்வரர் -   தட்சிணாமூர்த்தி மனைவி தாராவுடன் , சுருட்டப்பள்ளி
·         சிவபுரி எனும் திருநெல்வாயை(திருக்கழிப்பாலை), சிதம்பரம்
·         திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன்
·         தாயுமான சுவாமி கோயில்,திருச்சி மலைக்கோட்டை(தர்ப்பாசனம்)
·         பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்(கிழக்கு நோக்கி),திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்
·         திருலோக்கி, திருப்பனந்தாள் (அஞ்சலி முத்திரை)
·         புஷ்பவனநாதர் திருக்கோயில்,(காl maaRRi vadivam), தென்திருபுவனம், திருநெல்வேலி
·         பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்,ஓமாப்புலியூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் (சேலை அணிந்து)
·         ஐயாறப்பன் கோயில்,திருவையாறு ( கபாலமும் சூலமும் ஏந்திய வடிவம்)
·         திடியன் மலை கைலாசநாதர் கோயில்,மதுரை -  பதினான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த கோலம்
·         ஆதிரத்தினேஸ்வரர் கோயில்,திருவாடனை - வீராசன கோலம்
·         நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
·         திரிசூலம் கோயில், சென்னை - வீராசன கோலம்
·         தியாகராஜர் கோயில் (வெளியில்), திருவொற்றியூர்
·         தக்கோலம் (சாந்த தட்சிணாமூர்த்தி)-  உத்கடி ஆசனம்
·         வீணாதர தட்சிணாமூர்த்தி கோலம் - நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், திருப்பூந்துருத்தி, நஞ்சன்கூடு, காஞ்சிபுரம் கைலாசநாதர், தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில்
·         கல்யாணசுந்த ரேஸ்வரர்,நல்லூர் , தஞ்சை பாபநாசம் - இரட்டை தட்சிணாமூர்த்தி
·         ஆத்மநாதசுவாமி கோயில்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசை  -  யோகநிலை
·         ஹேமாவதி, அனந்தப்பூர்,ஆந்திரா - யோக மூர்த்தி
·         சுகபுரம், கேரளா மாநிலம்


இதரக் குறிப்புகள்

நூல்கள்
ஞான சூத்திரம்,
ஞானச் சுருக்கம்,
ஞான பஞ்சாட்சரம்,
அகஸ்த்திய சகலாதிகாரம்,
சாரஸ்வதீயசித்ரகர்மமசாஸ்த்திரம்,
சில்பரத்தினம்,
சிரிதத்துவநிதி,
காரணாகமம்,
அம்சுமத்பேதாகமம்,
லிங்கபுராணம்
ஆதிசங்கரர் இயற்றியது தட்சிணாமூர்த்தி அஷ்டகம்.

பல திருவுருவங்கள்

ஞான தட்சிணாமூர்த்தி,
வியாக்யான தட்சிணாமூர்த்தி,
சக்தி தட்சிணாமூர்த்தி,
மேதா தட்சிணாமூர்த்தி,
யோக தட்சிணாமூர்த்தி,
வீர தட்சிணாமூர்த்தி,
லட்சுமி தட்சிணாமூர்த்தி,
ராஜ தட்சிணாமூர்த்தி,
பிரம்ம தட்சிணாமூர்த்தி,
சுத்த தட்சிணாமூர்த்தி

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)


புகைப்பட உதவி : விக்கிபீடியா

No comments:

Post a Comment