Wednesday, February 15, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அமலம்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  அமலம்

வார்த்தைஅமலம்
பொருள்

·         மாசு அற்றது.
·         அழுக்கு இன்மை
·         தூய்மை
·         சுத்தம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலஞ்சொல் ஆணவ மாயை காமியம்
அமலந் திருக்கூத்தங் காமிடந் தானே.

10ம் திருமுறை - திருமந்திரம் – திருமூலர்

சிவன் செய்யும் திருக்கூத்தைத் திருவைந்தெழுத்தின் சீரிய முறையில் வைத்துக் கண்டால்  அனைத்தும் தூய்மை பெறும். பதி, பசு பாசங்கள் அனைத்தும் சுத்தம். கன்மங்களில் மலம் அடங்கி விடும். மாயை கன்மங்கள் அவற்றின் வழி பற்றி மறையும். மறைப்பாற்றலாகிய திரோதாயியும் திருவடியின்பம் கூட்டுவிக்கும்

துக்கடா
உயிரெழுத்துக்கள் - 12
மெய்யெழுத்துக்கள் - 18
ஆயுத எழுத்து - 1
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள்    12 X18 = 216

இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள்

No comments:

Post a Comment