ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – அரற்றுதல்
வார்த்தை : அரற்றுதல்
பொருள்
·
ஆரவாரித்தல்
·
ஒலித்தல்
·
கதறுதல்
·
கூப்பிடுதல்
·
பலவுஞ்சொல்லித்தன்
குறைகூறுதல்
·
அன்பினால்
வாய்விட்டழுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
ஆர்க்கோ *அரற்றுகோ* ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து.
8ம் திருமுறை - மாணிக்கவாசகர்
என்னோடு கூடி நின்று, இன்பப் பித்தேற்றுவான் திருப்பெருந்துறை இறைவனே என்று என்பால் தெளிவிப்பார் ஒருவர் உளராயின் அவரைப் பணிந்து ஆரவாரிப்பேனோ?. அரற்று வேனோ?. ஆடுவேனோ?. பாடுவேனோ?. நான் என் செய்து பாராட்டுவேன்?.
துக்கடா
குறில் - என் - என்னுடைய
நெடில் - எண் – எண்ணுதல்
No comments:
Post a Comment