ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – காதலித்தல்
வார்த்தை : காதலித்தல்
பொருள்
·
அன்புகொள்ளுதல்
·
விரும்புதல்
·
பற்று
கொள்ளுதல்
·
நேசித்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
முன்னம்
அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை
யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும்
அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை
மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
தேவாரம்
- 6ம் திருமுறை - திருநாவுக்கரசர்
முதலில்
சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய ஊராகிய
திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன்திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும்
அன்றே மனத்தால் துறந்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது
ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள்.
அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்.
அகத்துறை
பாடல் வரிசையில் வரும் பாடல் இது. நாயக நாயகி பாவத்தில் எழுதப்பட்டது. பரமாத்மாவை தலைவனாகவும்
ஜீவாத்மாவை நாயகியாகவும் கொண்டு எழதப்பட்ட பாடல் எனவும் கொள்ளலாம்.
துக்கடா
குறில் - கலை
நெடில் – களை
No comments:
Post a Comment