ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – அறைதல்
வார்த்தை : அறைதல்
பொருள்
·
அடித்தல்
·
பறைமுதலியன கொட்டுதல்
·
கடாவுதல்
·
சொல்லுதல்
·
துண்டித்தல்
·
மண்ணெறிந்து கட்டுதல்
·
ஒலித்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
வஞ்சகர் விட்ட சினப்போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர்
தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல
வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவ தில்லைஎன் றென்றே
அருந்தமிழ் பாடி *அறைந்தார்*.
12ம் திருமுறை - சேக்கிழார்
வஞ்சனையுடைய சமணர்கள் விடுத்த, மதமும் சினமும் உடைய யானையை நோக்கிச், `சிவந்த சடை பொருந்திய நீண்ட முடியையுடைய கூத்தரும், தேவர்க்கெல்லாம் தேவரும், வெண்மையான ஒளிபொருந்திய மூவிலைகளையுடைய சூலத்தை ஏந்தியவருமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரு மானின் அடியவர் யாம்! அதனால் அஞ்ச வருவது ஏதும் இல்லை.` என்று பாடினார்.
No comments:
Post a Comment