ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – பொழிதல்
வார்த்தை : பொழிதல்
பொருள்
·
சொரிதல்
·
ஈதல்
·
மிகச்
செலுத்துதல்
·
மழைபெய்தல்
·
வரையின்றிக்கொடுத்தல்
·
நிறைதல்
·
தங்குதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
கார்க்குன்
றமழை யாய்ப்பொழி வானைக்
கலைக்கெ
லாம்பொரு ளாய்உடன் கூடிப்
பார்க்கின்
றஉயிர்க் குப்பரிந் தானைப்
பகலுங்
கங்குலு மாகிநின் றானை
ஓர்க்கின்
றசெவி யைச்சுவை தன்னை
யுணரும்
நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின்
றகட லைமலை தன்னை
ஆரூ
ரானை மறக்கலு மாமே
தேவாரம்
- 7ம் திருமுறை - சுந்தரர்
அமைப்பில்
மலை போல் கரிய நிறம் கொண்டு மழையாய் நின்று பொழிபவனும், கலைகளுக்கு(64 கலைகள்) எல்லாம் பொருளாய் அவற்றுள் பொருந்தி நின்று, காணப்படுகின்ற
உயிர்களுக்கு இரங்குகின்றவனும், பகலாகியும் இரவாகியும் இருப்பவனும், ஒசையைக் கேட்கின்ற
செவியாகியும், சுவையை உணர்கின்ற நாவாகியும், உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும், ஒலிக்கின்ற
கடலாகியும், மலையாகவுயும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ.
இறைவன்
புறப் பொருளாகவும் - அண்டத்திலும் (மேகம் மழை பொழிதல், கலைகளாக இருத்தல், பகல் இரவாக
இருத்தல்) அகப் பொருளாகவும் - பிண்டத்திலும்
(நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி) இருத்தல் கண்கூடு.
துக்கடா
குறில் - எடு
நெடில் - ஏடு
No comments:
Post a Comment