ஓவியம் : இணையம்
'அறிவோம்
அழகுத் தமிழ் வார்த்தை' – மிழற்றுதல்
வார்த்தை : மிழற்றுதல்
பொருள்
·
மழலைச்சொல்
பேசுதல்
·
மெல்லக்
கூறுதல்
·
கொஞ்சுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகவெழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில் வைகாவிலே.
தேவாரம் - 3ம் திருமுறை - திருஞானசம்பந்தர்
பிரபஞ்சத்தில் எல்லைவரை நீண்டு இருக்கும் பெரிய மேருமலையை வில்லாகவும்,, அக்கினியைக் கணையாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு, பகையசுரர்களின் முப்புரங்களை எரிக்குமாறு செய்த சிவபெருமான் விரும்பும் இடமாவது, தாமரை மலர்களில் வண்டுகள் புகுந்து தேனுண்டு விளையாடி, வயல்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள குளங்களிலும் தேனுண்ட மகிழ்ச்சியில் இசைபாட, அதற்கேற்ப அழகிய குயில்கள் கூவுகின்ற சோலைகளையுடைய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
துக்கடா
குறில் - இடு
நெடில் - ஈடு
No comments:
Post a Comment