Friday, February 17, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - முடலை

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  முடலை

வார்த்தைமுடலை
பொருள்

·         பெருமை
·         வலி
·         புலால்நாற்றம்
·         உருண்டை
·         முருடு
·         கழலை
·         மனவன்மை
·         திரட்சி
·         பெருங்குறடு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
நடலை இலராகி நன்(று) உணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று.

பழமொழி நானூறு

மனத்தினுள்ளே நன்மை தீமைகளைப் பற்றிய கவலையில்லதவர்களாகி, நல்லது தீயது எவை என்பதையும் உணராதவர்களாகிய, மனவலிமையுள்ள மூடர்கள் கூடி இருக்கும் சபையினுள்ளே சென்று, உடலளவான மனிதருள் ஒருவனாக விளங்கும் ஒரு மூடனுக்கு, உறுதி தரும் பொருள் பற்றிச் சொல்லுதல் வீணானதாகும். அஃதாவது கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும்.

துக்கடா

ஆயுத எழுத்து  மூன்று புள்ளி வடிவமாக இருப்பது  இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

No comments:

Post a Comment