Monday, February 20, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - முறைவன்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  முறைவன்

வார்த்தைமுறைவன்
பொருள்

·         சிவபிரான்
·         பாகன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
அழிகின்ற தாருயிர் ஆகின்ற
    தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
    முலைமேற் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
    வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்னினி நான்மறை
    முக்கண் *முறைவனுக்கே*

பதினொன்றாம் திருமுறை

நான்கு மறைகளையும் அருளிச் செய்த,மூன்று கண்களையுடைய அறவோன் பொருட்டு எனது அரிய உயிர் போய்க் கொண்டிருக்கின்றது. அதுபோவதற்கு முன்னே மனக் கவலை உண்டாகின்றது; மயக்கம் மிகுகின்றது; சங்க வளையல்கள் கழன்று வீழ்கின்றன; இறுமாந்திருந்த கொங்கைகளின் மேல் பீர்க்கம்பூப் போலும் பசலைகள் வெளிப்பட்டுக் கிடந்தன; கண்கள் நீரைப் பொழிகின்றன; வாய் புலர்ந்து விட்டது; மேகலைகள் போயே விட்டன. எனக்காக அவரிடம் தூது சென்று வந்தவர்கள் என்ன சொல்கின்றனரோ!

துக்கடா
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

யாப்பின் உறுப்புகள்

எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை

No comments:

Post a Comment