ஓவியம் : இணையம்
'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – அஜபை
வார்த்தை : அஜபை
பொருள்
·
மந்திர
வகை
·
ஊமை
மந்திரம்
·
வள்ளி
நாச்சியார் - இச்சா சக்தி
·
"ஸோ"என்னும் சிவ நாமம்
·
வாய்ந்திறந்து
பேசாமல் மனதால் உச்சரிக்கப்படும் மந்திரம்
·
ஸப்தவிடங்க
க்ஷேத்ரத்தில் ப்ரதானமான திருவாரூரில் த்யாகராஜா
ஆடும் நடனம் ஹம்ஸ நடனம் / அஜபா நடனம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
1)
இடைகலை,பிங்கலை,சுழுமுனை சுவாசத்தால் உண்டாகும் சப்தமே அஜபை. பிராணவாயுவை உட்கொள்ளும்போது ஸோ என்றும் நிறுத்தி நிதானிக்கும்போது ,ஹம், என்றும் சப்தம் ஏற்படுவதால் ,ஸோஹம் என்று இந்த அஜபைக்குப் பெயர் ஏற்பட்டது.
2)
பிராண வாயுவை கட்டுப்படுத்தி சித்த விருத்திகளும் லயமும் அடையும் மனேன்மணி அவஸ்தை
3)
திருமந்திரம் 4ம் தந்திரம் அஜபை என்ற அதிகாரம் வைத்தே ஆரம்பிக்கிறது.
2.
குண்டலி
அதனில் கூடிய *அசபை*
விண்டெழு
மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின்
மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும்
கருத்து அறிவித்தே
விநாயகர்
அகவல் - ஔவையார்
இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படுமாறு சொல்லி,
மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து........
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
No comments:
Post a Comment