Wednesday, June 5, 2013

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம் - சிந்தனை

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் - என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், 'பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் 'பதி' குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.

எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.

பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் - திருமந்திரம் - உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )

நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும்.
அவ்வாறு அல்லாது,
1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்)
2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று)
3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)

அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும்.
எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும்.
சித்து          - அழியாதது.
அ - சித்து  - அழியக் கூடியது.

கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

4 comments:

  1. Thanks for your comments Deepa Iyer. I thought of publishing this on every Thursday. But I published today. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..

    ReplyDelete
  2. OmNamaShivaya
    Inside the body there is desire and greed; inside the mind there is doubt; inside the world there is change, there is death. Go beyond these and you will find peace and bliss.

    SWAMI RAMAKRIHSNANANDA

    ReplyDelete