Wednesday, June 12, 2013

சைவ சித்தாந்தம்

உடம்பு அழியக்கூடியது. (தேகம்) - எனில் அதைப் பகுக்க முடியுமா?

ஜடப் பொருள்கள் அழியக்கூடியது.

பிருதிவி, அப்பு, தேயு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கை. எனவே இது அழியும்.  எனவே இவை ஜடப் பொருள்கள். எனவே அது சித்து ஆகாது.

அப்படி எனில் மனத்தின் வேலை எது -
கீழே குறிப்பிட்டவைகளின் தொடர்கலவையே செயல்.

மனம்  - நினைக்கும்.
புத்தி  - விசாரிக்கும்.
சித்தம்  - நிச்சயிக்கும்.
அகங்காரம் - துணியும்.

எனவே சித்தம் என்பது பூதங்களின் சேர்க்கை தவிர்த்த மற்றொன்று. சில நேரங்களில் கனவு காண்கிறோம். அவை நிச்சம் என்றும் நம்புகிறோம். விழித்தவுடன் அது கனவு என்பது பற்றிய தெளிவு வருகிறது.

அது போலவே 'நான்' தேகம் என்னும் நிலை மாறும் போது, அசித்து பற்றிய எண்ணம் தெளிவுறுகிறது. அது உலகியல் நிலையாமை என்னும் கருத்தை வலியுறுத்தி நிச்சயப்படுத்துகிறது.

கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

2 comments:

  1. சித்தான்தத்தை அறிந்தவன் சித்தாந்தி என்பது மாறி இப்போது சித்து (மர்மம் /மாந்தரீகம் ) அறிந்தவன் தான் சித்தாந்தி என்று ஆகிவிட்டது

    ReplyDelete
  2. கால மாற்றம் மட்டுமே காரணம். மர்மம் /மாந்தரீகம் ஆகியவைகள் மிக கடை நிலை வகைகள். கருத்துக்கு நன்றி Ganesh Puttu.

    ReplyDelete