ஆன்மா குற்றங்கள் உடையது என்று கண்டோம்.
சுதந்திரமின்மை கொண்டது ஆன்மா. நினைத்தபடி ஒரு காரியத்தை முடியாமல் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம்.
பொருள் மீது ஆசை கொள்ளுதல் என்பது அதிருப்தியை உண்டாக்கும். பக்குவமற்ற ஆன்மாக்கள் இச்சை கொண்டு உழலுவதால் அது அதிருப்தி உடையது என அறியலாம்.
தன்னை அறிதல் இயற்கை. தன்னை அறியும் அறிவு இருந்தும் தன்னை அறியும் சக்தி இல்லாமையால் ஆன்மா செயற்கை உணர்வு உடையது.
பிறப்புகள் பலவகைப்படும்.தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர் மற்றும் தேவர். (புல்லாகி புழுவாகி என்ற மணிவாசக் பெருமானின் வரிகள் நினைவு கூறத்தக்கவை.
பஞ்ச பூதங்களின் வயப்பட்டு(பிருதிவி, அப்பு, தேயு,வாயு மற்றும் ஆகாயம்) ஆன்மா குற்றங்களை உடையது. எனவே குற்றமற்ற வேறு ஒன்று அதை இயக்க வேண்டும். அதன் பொருட்டே ஆன்மாக்களின் பிறப்பு.
No comments:
Post a Comment