Wednesday, June 19, 2013

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் - 'சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்' என்ற தலைப்பில் வரும்.

ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.

காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.

காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்

குரோதம்: கோபம்

லோபம்: பேராசை

மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.

மாத்ஸர்யம்: பொறாமை

மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.

'செம்புல பெயல் நீர் போல்' என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.

2 comments: