Thursday, June 20, 2013

அக்னி

யயாதி என்றொரு மன்னன் இருந்தான். அவன் நகுஷனின் புத்திரன்.

அவன் மக்களின் சந்தோஷம் முதன்மையானது என்று ஆட்சி செய்தான்.அவனுக்கு 5 புதல்வர்கள்.

பல வருடங்கள் ஆட்சி செய்தப்பின் ரூபத்தை அழிப்பதும், மிக்க துன்பத்தை தரத்தக்கதுமான முதுமையை அடைந்தான்.

அவன் தனது புதல்வர்களை அழைத்து தான் இளமையோடு இருக்க விருப்புவதாக கூறினான். 

புதல்வர்கள் இதனால் 'தங்களுக்கு என்ன பயன்' என்று கேட்டார்கள்.

'எனது முதுமையை வாங்கிக் கொள்வர்கள் அரசாட்சி செய்யலாம்' என்றான்.
மகன்கள் விரும்பவில்லை.

பூரூ என்ற மகன் 'தான் முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்' என்றான்.

பல ஆண்டுகள் இளமையோடு இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்தான். பல வருடங்களுக்குப் பின் அவனுக்கு ஞானம் வந்தது. 'காமம் விரும்பியவைகளை அனுபவிப்பதால் தீருவது இல்லை. அது அக்கினியில் இடப்பட்ட நெய் போல் ஜ்வலிக்கிறது. எத்தனை வகையான பொருள்களை அனுபவித்தாலும் அது ஒழிவை அடைவதில்லை.எந்த காலத்திலும் எப்பொழுதும் தீமை செய்யாமல் இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான். எப்பொழுது விருப்பு வெறுப்பு அற்று இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான்'.

மீண்டும் பிள்ளையிடம் இருந்து மூப்பினை வாங்கிக் கொள்கிறான்.

காமியார்த்தமாக சொன்னால் - பெரும்பாலான பிள்ளைகள் தந்தை சொல் பேச்சினை கேட்பதில்லை.

ஆத்மார்த்தமாக சொன்னால் - சுகம் அனுபவித்தல் முடிவில்லாதது. தன்னைத்தான் வெல்ல வேண்டும்.

2 comments: