விக்னங்களை தீர்க்கும், மங்களைத் தரும் விநாயகர் அருள் புரியட்டும். தமிழ் தலைவனும், சித்தர்களின் நாதனும் ஆறுமுகங்களையும் உடைய செந்தில் நாதன் அருள் புரியட்டும்.
முழு முதற் கடவுளும், சைவத் தலைவனும், பிறவிப் பிணிகளை நீக்குபவனும், ஐந்தொழிலுக்கு உரியவனும், பிறப்பிலியும், ஆதி நாயகனுமான சிவனும் வாம பாகத்தில் என்றும் நிறைந்திருக்கும் அம்பாளின் துணை கொண்டு இக்கட்டுரைகளை எழுதத் துவங்குகிறேன்.
எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் என்றும் என்னை வழிநடத்தும் தாயைப் போல் எனக் காத்து எனை வழி நடத்தும் என் குருநாதர் எனக்கு அருள் புரியட்டும்.
இது சமயக் குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலங்கள் பற்றிய செய்திகள். இது குறித்து சைவத் திருத்தலங்கள் 274 என்ற தலைப்பில் எழுத உள்ளேன். சிறு குறிப்புகளுடன் தலத்திற்கு 2 பாடல் வீதம் எழுத உள்ளேன்.
தலம்
பிற பெயர்கள்
இறைவன்
இறைவி
தல விருட்சம்
தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் /முகவரி
நிர்வாகம்
பாடியவர்கள்
இருப்பிடம்
இதர குறிப்புகள்
பாடல்
விளக்கம்
குறைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
காவிரிக்கு வடகரையிலுள்ள திருத்தலங்கள் - 63
காவிரிக்கு தென்கரையிலுள்ள திருத்தலங்கள் - 127
ஈழநாட்டிலுள்ள திருத்தலங்கள் - 2
பாண்டிநாட்டிலுள்ள திருத்தலங்கள் - 14
மலைநாட்டிலுள்ள திருத்தலங்கள் - 1
கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்கள் - 7
நடுநாட்டிலுள்ள திருத்தலங்கள் - 22
தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள் - 32
துளுவ நாட்டிலுள்ள திருத்தலங்கள் - 1
வட நாட்டிலுள்ள திருத்தலங்கள் - 5
ஆக மொத்தம் - 274
கோவில் என்றதும் என் நினைவில் என்றைக்கும் வரும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரன் உறைவிடமாகிய மயிலையில் பயணம் தொடங்குகிறது.
No comments:
Post a Comment