Thursday, March 27, 2014

சைவத் திருத்தலங்கள் 274 - திருவொற்றியூர்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள்

·   சிவன் சுயம்பு மூர்த்தி - தீண்டாத் திருமேனி
·   சிவன் வடிவம் - பாணலிங்க வடிவம்
·   மூலவர் - படம்பக்க நாதர் - கவச திருமேனி - கார்த்திகை பௌர்ணமி ஒட்டிய மூன்று நாட்கள் மட்டும் கவசம் விலக்கப்படும்.
·   அம்பிகை ஞான சக்தி வடிவம்
·   மகிஷாசூரன் அற்ற துர்க்கை
·   அம்மனின் 51வது சக்தி பீடங்களில் இஷூ பீடம்
·   தேவாரப் பாடல் வரிசைகளில் 253வது தலம்
·   சப்த விடத் தலங்களில் ஒன்று
·   கஜ பிருஷ்ட விமானம்
·   பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி
·   சிவனில் வடிவங்களில் ஒன்றான ஏகபாத மூர்த்தி - வெளிப் பிரகாரத்தில்
·   சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்ட இடம்
·   ஏலேலே சிங்கர் மன்னருக்கு தருவதாக வைத்திருந்த மாணிக்கங்களை காசி சிவ பக்தர்களிக்கு தந்ததால் 'மாணிக்க தியாகர்'
·   உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி வாசுகி முக்தி வேண்டி வழிபட்டு முக்தி அடைந்த இடம் - படம்பக்க  நாதர்
·   கண்ணகியின் உக்கிரம் குறைக்க சிவனும் பார்வதியும் தாயம் ஆடி, கட்டைகளை கிணற்றில் இட்டு கண்ணகியை கிணற்றினுள் இட்டு கோபம் குறைத்த இடம்
·   63 நாயன் மார்களில் ஒருவரான கலிய நாயனார் வறுமையின் காரணமாக தனது கழுத்தை அறுத்து ரத்தத்தை எடுத்து விளக்கு எரித்து முக்தி அடைந்த தலம்.(குருபூசை நாள்: ஆடி - கேட்டை)
·   63 நாயன் மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடிய தலம்
·   நுனிக் கரும்பை இனிக்க வைத்து பட்டினத்து அடிகளுக்கு முக்தி அளித்த தலம்.
·   நந்திக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடிய இடம்
·   வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் குறைய ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம் செய்த இடம்


தலம்
திருவொற்றியூர்
பிற பெயர்கள்
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம்
இறைவன்
படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர்,
இறைவி
வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம்
மகிழம், அத்தி
தீர்த்தம்
பிரம்ம, நந்தி தீர்த்தம்
சிறப்புகள்
 சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம்.
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்
திருவொற்றியூர்
சென்னை
PIN – 600019
+91-44 - 2573 3703.  +91-94444-79057
வெள்ளி - காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
பெளர்ணமி -  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மற்ற நாட்கள் - காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை - 4 மணி முதல் இரவு 8 30 மணி வரை
பாடியவர்கள்
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
நிர்வாகம்
இந்து அறநிலையத்துறை
இதர குறிப்புகள்
ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன்,, பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் ஆகியவர்கள் வழிபட்ட தலம்.
காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார் ஆகியவர்கள் பாடி உள்ளனர்

வடிவுடைஅம்மன்




பாடியவர்                      திருநாவுக்கரசர்     
திருமுறை                     4ம் திருமுறை 
பதிக எண்                     45
திருமுறை எண்                7

பாடல்

பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே


கருத்து

மரணம் உடையதும், விரும்பத் தக்காத நாற்றம் உடைய உடலை பாதுகாக்க பைத்தியம் போல் திரிந்து மறுமையைத் தரும் சிற்றின்பத்தை விலக்குக. நீக்குவதற்கு உரித்தான எளிதான வழி நெஞ்சில் உறையும் இறைவனையும் நினைத்தல். அவ்வாறு செய்தால் ஒற்றிவூர் உறையும் அரசனைப் போன்ற ஒற்றியூர்ப் பெருமான் அக்குறைகளை நீக்குவான்.

பாடியவர்                  சுந்தரர்         
திருமுறை                7ம் திருமுறை
பதிக எண்                 91          
திருமுறை எண்           9   

பாடல்

பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.

பொருள்

மலையை அசைத்த அரக்கனாகிய இராவணின் உறுப்புகள் ஏதும் இல்லாதவாறு செய்தவர் சிவன். அவர் இதனை அவர் தனது பெரு விரலால் செய்தார். அவர் கடல் சூழ்ந்த இந்த திருவொற்றியூரில் இருந்து வினைகளை நீக்கி அடியவர்களுக்கு அருள் செய்கிறார்.

No comments:

Post a Comment