Monday, February 24, 2014

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் - 6



முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் காட்சி குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்















1.
விளக்கம்

கிரௌஞ்சமலையை பிளந்தவன்
அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவன்
கடல் வற்றச் செய்தவன்
ஐந்து பூதங்களையும் நீக்கச் செய்து
உரை அற்று உணர்வு அற்று - சொற்கள் அற்று, உணர உணர்வுகள் அற்று
உடலற்று உயிரற்று - உடல் நீக்கி, உயிர் அற்று
உபாயம் அற்று -
கரையற்று -
இருளற்று - நீக்கமற நிறைந்திருக்கும் ஒளி
எனதற்று - மும்மலத்தில் முக்கியமானதான கர்வத்தால் உண்டாகும் 'தான்' என்னும் அகங்காரம்.


பாடல்

வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. 61


பொருள்

சமாதி நிலையின் காட்சிகளும் அதற்கு முருகன் எவ்வாறு உதவினான் என்பதும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

கருத்து

கிரௌஞ்சமலையை பிளந்தவனும், அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவனும், கடல் வற்றச் செய்தவனுமான முருகன் எனக்கு போதனை செய்தருளினான். இதனால் பஞ்ச பூதங்களில் செய்கைகள்(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்ஒசை) நீங்கப் பெற்றன.அஃதாவது புறக்கருவிகள் செயல்கள் நீங்கப் பெற்றன. புறக்கருவிகளில் செயல்பாடுகள் நீங்கும் போது உணர்வு நீங்கப் பெற்றும், உடல் நீங்கப் பெற்றும், முக்தி என்கிற நிலையும் அழிந்து, கரைகாணமுடியாதும், மிக ஓளி பொருந்திய அக்காட்சியை அவன் எனக்கு அருளினான்.

2
விளக்கம்
துருத்தி - காற்றை உட்செலுத்த பயன்படும் கருவி

.
பாடல்

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 71

பொருள்

கடினமான யோக மார்கங்களால் அடையப் படும் முக்தி நிலையையும், அதற்கு மாற்றாக எளிதான வழியில் அடையும் எளிய வழியும் இப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.

கருத்து

துருத்தி என்ற கருவி போன்று காற்றை உட் செலுத்தி, கும்பகம் செய்து(காற்றை உள்ளே நிறுத்துதல் - பூரக கும்பம் மற்றும் ரேசக கும்பம்) உட் செல்லும் பிராண வாயுவை முறித்து, அதை உணவாக கொண்டு முக்தி அடைதலை எதற்காக செய்ய வேண்டும். ஆறு திரு முகங்களை உடைய குருநாதன் சொன்ன சொல்லின் உட் கருத்தை மனதில் பதிய வைப்பவர்கள் முக்தி அடைவார்கள்.


இத்துடல் முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் பகுதிகள் நிறைவு பெருகின்றன.

No comments:

Post a Comment